Thursday, April 19, 2007

தருமியும், அரை நூற்றாண்டு அனுபவமும்!

அரை நூற்றாண்டு அனுபவம், பேராசிரியர், 53 வருட பைபிள் ஆராய்ச்சி என ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டு, கிறிஸ்தவம் சரியல்ல; பைபிளில் சந்தேகம்; ஆகவே ஒன்றுமே சரியல்ல; எனவே நான் மதம் மாறி விட்டேன் எனக் கூறி தொடர்ந்து இன்று மற்ற மதத்தினரின் கொள்கைகள் மீது கேள்விகளை எழுப்பி வரும் திரு. தருமி அவர்கள், ஆரம்ப நாட்களில் இருந்து அவர் மதம் மாறியதற்கு அடுக்கிய காரணங்களை வைத்து நான் கேட்ட கேல்விக்கு இன்று வரை பதில் தராமல் அனுபவஸ்தர் வேடமணிந்து மற்றவர்களை ஏமாற்றி வருகிறார்.

இது தொடர்பாக நண்பர் நல்லடியார் அவர்களின் பதிவில் நான் போட்ட ஒரு பின்னூட்டம்:

//கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறுவதற்கான காரணங்கள் நியாயமானவையாகப்படவில்லை.//

Arokkiyam உள்ளவரின் கூற்றில் முழு உண்மையுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

அவர் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறியதற்கு கூறிய மிக முக்கிய காரணங்களில் ஒன்று:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்ற சம்பவமாகும். இவ்வாறு பைபிளில் வருவதை நம்ப இயலவில்லை எனவும், கர்த்தரின் மகனாகிய இயேசுவை அவரின் அனுமதியின்றி எப்படி யூதர்களால் கொல்ல முடிந்தது என்றும், தன்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாதவரால் மற்றவர்களை எப்படி இரட்சிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி அதனால் கிறிஸ்தவத்திலிருந்து மாறியதாக கூறினார்.

இதனை எதிர்த்து பைபிளில் அவ்வாறு இல்லை எனவும், அதற்கு மாறாக பைபிளில் இயேசுவை கர்த்தர் காத்து இரட்சித்ததாகத் தான் வருகிறது எனவும், எனவே நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற கூறிய காரணங்களில் இந்த காரணம் முழுக்க அபத்தமானது எனவும் கூறி அந்த நாட்களில் இருந்தே அவரிடம் நான் கேள்வி கேட்டு வருகிறேன்.

இதுநாள் வரை அவர் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

உண்மையிலேயே தனது வாதங்களில் நியாயம் உள்ளவராக இருந்தால், குறைந்தபட்சம் தான் ஒரு பேராசிரியர்(அவர் கூறிக் கொள்வது) எனவே பொய், பித்தலாட்டம் செய்யக் கூடாது என்ற எண்ணம் உள்ளவராக இருந்தால் எனது அந்த கேள்விக்கு அவர் பதில் கூற வேண்டுமா இல்லையா?

நண்பர் குழலி கூறுவது போன்று உண்மையிலேயே அரை நூற்றாண்டு அனுபவம், அதிலும் பைபிளை கரைத்துக் குடித்த அனுபவம் உள்ளவர் என்பது உண்மையானால் எனது ஆந்த கேள்விக்கு பதில் கூற தயங்குவது ஏன்?

இப்பொழுது கேள்வி ஒன்று தான்.

* தருமி கூறுவது போன்று இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக மட்டும் தான் பைபிளில் வருகிறதா?

* இல்லை நான் கூறுவது போன்று இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காத்து இரட்சித்ததாக பைபிளில் வருகிறதா?

நான் என் கூற்றில் உறுதியாக இருக்கின்றேன்.

பைபிளில், இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காத்து இரட்சித்ததாக தெளிவாக வருகின்றது. அதனை என்னால் பைபிளை வைத்து நிரூபிக்க இயலும்.

இல்லை. அவ்வாறு பைபிளில் கிடையவே கிடையாது என அரை நூற்றாண்டு(50 வருட) பைபிள் அனுபமுடைய முன்னாள் கிறிஸ்தவரான, பேராசிரியரான தருமியால் உறுதியாக கூறி அவ்வாறு இல்லை என நிரூபிக்க இயலுமா?

50 வருடமாக பைபிளோடு ஒட்டி உறவாடிய பேராசிரியர் அனுபவஸ்தர் தருமி அவர்களின் மதம் மாற்றத்திற்கான இந்த காரணம் என்னால் உடைக்கப்பட்டால், ஏதோ அனைத்து மதங்களையும் கரைத்துக் குடித்தது போன்று மற்ற மதங்களின் மீது அவர் வைக்கும் வாதங்கள் அனைத்தும் குழப்பமானவையே என்பது உடைபட்டு போகும் என்பதனால் தான் நல்ல அனுபவஸ்தரான, பேராசிரியர் அவர்கள் என் கேள்வியை கடந்த அரை ஆண்டுகளாக சட்டையே செய்யாமல் திரும்பத் திரும்ப இஸ்லாத்தின் மீது கேள்விகளை சுட்டி வருகிறார்.

அவருக்கு முழுமையாக பைபிளைக் குறித்தே போதிய அறிவு இல்லை என என்னால் நிரூபணமானால் நண்பர் குழலி போன்று, அவர் மீது மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ள வலைப்பதிவர்களுக்கு முன்னிலையில் தந்து முகத்தை எங்கே கொண்டு அவர் வைத்துக் கொள்வார்? அதனால் தான் என் கேள்வியை இதுவரை அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை.

நண்பர் குழலி அவர்களுக்கு நான் விரும்பிக் கேட்டுக் கொள்வது ஒன்றே. தாங்கள் நினைப்பது போல் இவருக்கு உண்மையிலேயே அரை ஆண்டு அனுபவம்(முக்கியமாக பைபிளில்) இருப்பது உண்மையானால், அவரது கருத்துக்கள் அனைத்தும் நிதர்சனமானவை, உண்மையானவை என்றால் என் கேள்விக்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும். என்னோடு அவர் விவாதத்திற்கு வரட்டும். அதற்கு தங்களைப் போன்றவர்கள் அவரை வற்புறுத்த வேண்டும்.

அவர் மதம் மாறுவதற்கு கூறிய காரணம் உண்மை என அவர் முதலில் நிரூபித்து விட்டு அதற்குப் பிறகு அவர் அறியாத மற்ற மதங்களின் கொள்கைகள் மீது கேள்விகளை அடுக்கட்டும்.