Tuesday, June 12, 2007

தருமிக்காக என்னை நொந்து கொள்கிறேன்!

அய்யா தருமி அவர்களே,

என்னை நினைவிருக்கின்றதா? இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா?

நான் பகுத்தறிவாளன்.

நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற காரணங்களை அடுக்கியதில் மிக முக்கியமான காரணமான //இயேசுவை கர்த்தர் காப்பாற்றாததைக்// குறித்து ஒரு கேள்வி - ஒரே ஒரு கேள்வியை உங்களிடம் கேட்டு நான் போட்ட பின்னூட்டத்திற்கு விளக்கம் அளிக்காதது மட்டுமின்றி, இந்த நிமிடம் வரை அந்த பின்னூட்டத்தை உங்கள் "அந்த 9" பதிவில் அனுமதிக்கவும் செய்யாமல் மறைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.

சொந்தமாக நான் பட்ட சோகக்கதைகளை(!) எழுத நினைத்து ப்ளாக் உலகத்துக்கு வந்த என்னை, பர்தாவைக் குறித்து நான் என் வாழ்வில் பட்ட ஓர் அனுபவத்தை வைத்து ஒரு பதிவு எழுதியதில் அழைக்காமலே வந்த விருந்தாளி போன்று வந்து எள்ளி விட்டு என்னை உங்கள் பக்கம் திரும்ப வைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.

இந்த பதிவில் நீங்கள் எழுதியுள்ள பொன்னால் குறிக்கப்பட வேண்டிய ஒரு வாசகம்:

//கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன். அதை விட்டு விட்டு தனிமனித எள்ளலோடு எழுதுபவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது?//

நீங்கள் அன்று என்னுடைய அந்த பர்தாவை குறித்த அனுபவத்தை எழுதியதில், என் அனுபவம் சார்ந்த கருத்துக்களுக்கு மட்டும் பதிலளித்திருந்தால் மேலே நீங்கள் கூறியதில் அர்த்தமிருக்கின்றது - கண்டிப்பாக உங்களைப்போன்றவர்கள் இந்த வாசகங்களை பயன்படுத்துவதில் ஒரு அர்த்தமிருக்கின்றது.

ஆனால் அந்த என்னுடைய பதிவில் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பது நினைவுள்ளதா?

எழுதக் கூடியவனின் மதமும்/பின்னணியும் என்ன என்பது அவசியமில்லை எனக் கூறும் நீங்கள், அன்று நான் என் அனுபவம் சார்ந்த கருத்துக்களை கூறிய போது, ஒழுங்காக அந்த கருத்துக்களுக்கு மட்டுமே பதிலளித்திருந்தால் மேலே கண்ட வார்த்தைகளை கூறுவதற்கு உங்களுக்கு தகுதியிருக்கின்றது.

அன்று என் பதிவில் என் அனுபவ கருத்துக்களை ஓர் எள்ளலுடன் எதிர்கொண்ட உங்களுக்கு பதில் தர வேண்டும் என்பதற்காகவே உங்கள் பதிவுக்கு வந்தேன்.

வந்த இடத்தில் தான் நீங்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாற காரணமாக கூறிய "அந்த 9"(இதனை பதிலுக்கு பதில் எள்ளலாகவே எடுத்துக்கொள்ளுங்கள்) கேள்விகள் அடங்கிய பதிவை கண்டேன்.

53 வருட காலம் அனுபவம் உள்ளவர், 53 வருட ஆராய்ச்சியில் பைபிளில் கண்டது என்ன?

"கர்த்தர் இயேசுவை கைவிட்டார். காப்பாற்றவில்லை" - இது நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற கூறிய பிரதான காரணங்களில் ஒன்று.

சும்மா செவனே என்றிருந்த என்னை என் அனுபவ கருத்துக்களை எள்ளி இங்கே அழைத்து உங்கள் பதிவை படிக்க வைத்தீர்கள்.

நானோ உங்களை போன்று நாகரீகமின்றி செயல்படாமல், நீங்கள் கூறிய உங்களின் அனுபவ பைபிள் அறிவு சரியல்ல எனச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினேன்.

ஓர் நல்ல பேராசிரியர் என்ன செய்திருக்க வேண்டும்?

என் கேள்விக்கு தகுந்த விளக்கம் அளித்திருக்க வேண்டும். அக்கேள்வியில் நான் உங்களை எள்ளி நகையாடி ஒன்றும் பின்னூட்டம் இடவில்லையே.

ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த பின்னூட்டத்தையே இதுவரை அனுமதிக்கவில்லை.

இதுவா உங்கள் நடுநிலைமை?

உங்கள் கருத்துக்களையே என் கேள்வி குழிதோண்டி புதைக்கும் என்பதால் தானே இன்று வரை என்னுடைய அந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்கவில்லை.

நல்லடியார் போன்றவர்களின் பதிவுகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு //"அவர்களின் எள்ளல் தொனியிலான பதிவுகள் தான் காரணம்"// என காரணம் கூறியுள்ளீர்கள்.

உங்களின் "அந்த 9" கேள்விகள் பதிவில் போட்ட என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் இதுவரை அனுமதிக்காததற்கும் அதனை கண்டுகொள்ளாததற்கும் உண்மையில் அது தான் காரணமா? உங்கள் நெஞ்சைத் தொட்டு பதில் கூறுங்கள் பார்ப்போம்.

உங்கள் பதிவில் என் முதல் பின்னூட்டம், உங்களின் மதமாற்றத்திற்கு நீங்கள் குறிப்பிடும் காரணம் தவறானது என்று சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் மட்டும் தானே கேட்டிருந்தேன்.

கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ளும் நியாயவானாகிய 53 வருட அனுபவ பேராசிரியர் நீங்கள், குறைந்தபட்சம் அந்த என் பின்னூட்டத்தை மட்டுமாவது அனுமதிக்காததன் காரணம் - தங்களின் மதமாற்ற வைபவமே கேள்விக்குறியாகி விடும் என்பதனால் அல்லவோ?

என் பதிவில் வந்து, என் அனுபவ கருத்தை எள்ளியதோடு, உங்கள் பதிவில் என் நியாயமான கேள்வியை நீங்கள் புறக்கணித்ததும் தானே என்னை தொடர்ந்து உங்களை எள்ளி நகையாடி தொடர்பதிவுகளை போட வைத்தது. இதனை இல்லை என்று உங்களால் மறுக்க இயலுமா?

சரி கடந்து போனவைகள் அனைத்தையும் மறந்து விட்டு விடுவோம். வேண்டுமெனில் உங்களை எள்ளி நகையாடி நான் போட்ட பதிவுகளையும் வேண்டுமெனில் தூக்கி விடுகின்றேன்.

நீங்கள் கூறியது போன்று,

//கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன்.//

உங்கள் கருத்தை மட்டுமே வைத்து கேள்வி எழுப்புகின்றேன். நீங்கள் பதிலளிக்க தயாரா?

நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற கூறிய காரணங்களுள் மிக முக்கியமானது, //"இயேசுவை கர்த்தரால் காப்பாற்றாதது".//

"பைபிளில் இயேசுவை கர்த்தர் காத்து இரட்சித்தார்" என்று வருவதாக நான் கூறுகின்றேன்.

இதனைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

என் கருத்தை ஒத்துக் கொண்டு உங்களின் கருத்தை திரும்பப்பெற்றுக் கொள்கின்றீர்களா?

நீங்கள் மதம் மாறுவதற்காக கூறிய காரணங்களில் தவறுகள் உள்ளன என ஒத்துக் கொள்கின்றீர்களா?

இல்லை, பைபிளில் அவ்வாறு கிடையவே கிடையாது; இயேசுவை கர்த்தர் காத்ததாக பைபிளில் வரவே இல்லை என உங்களின் 53 வருட பைபிள் அறிவை வைத்து என்னிடம் சவால் விடுகின்றீர்களா?

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் நீங்கள் குறைந்தபட்சம் இந்த பின்னூட்டத்தையாவது நடுநிலையுடன் அனுமதிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

(இந்த பதிவோடு சம்பந்தப்பட்ட நல்லடியாரின் பதிவிலும், என் வசதிக்காக என் பதிவிலும் இப்பின்னூட்டம் பதியப்படும்.)

பகுத்தறிவாளன்.