Tuesday, June 12, 2007

தருமிக்காக என்னை நொந்து கொள்கிறேன்!

அய்யா தருமி அவர்களே,

என்னை நினைவிருக்கின்றதா? இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா?

நான் பகுத்தறிவாளன்.

நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற காரணங்களை அடுக்கியதில் மிக முக்கியமான காரணமான //இயேசுவை கர்த்தர் காப்பாற்றாததைக்// குறித்து ஒரு கேள்வி - ஒரே ஒரு கேள்வியை உங்களிடம் கேட்டு நான் போட்ட பின்னூட்டத்திற்கு விளக்கம் அளிக்காதது மட்டுமின்றி, இந்த நிமிடம் வரை அந்த பின்னூட்டத்தை உங்கள் "அந்த 9" பதிவில் அனுமதிக்கவும் செய்யாமல் மறைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.

சொந்தமாக நான் பட்ட சோகக்கதைகளை(!) எழுத நினைத்து ப்ளாக் உலகத்துக்கு வந்த என்னை, பர்தாவைக் குறித்து நான் என் வாழ்வில் பட்ட ஓர் அனுபவத்தை வைத்து ஒரு பதிவு எழுதியதில் அழைக்காமலே வந்த விருந்தாளி போன்று வந்து எள்ளி விட்டு என்னை உங்கள் பக்கம் திரும்ப வைத்தீர்களே, அதே பகுத்தறிவாளன்.

இந்த பதிவில் நீங்கள் எழுதியுள்ள பொன்னால் குறிக்கப்பட வேண்டிய ஒரு வாசகம்:

//கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன். அதை விட்டு விட்டு தனிமனித எள்ளலோடு எழுதுபவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது?//

நீங்கள் அன்று என்னுடைய அந்த பர்தாவை குறித்த அனுபவத்தை எழுதியதில், என் அனுபவம் சார்ந்த கருத்துக்களுக்கு மட்டும் பதிலளித்திருந்தால் மேலே நீங்கள் கூறியதில் அர்த்தமிருக்கின்றது - கண்டிப்பாக உங்களைப்போன்றவர்கள் இந்த வாசகங்களை பயன்படுத்துவதில் ஒரு அர்த்தமிருக்கின்றது.

ஆனால் அந்த என்னுடைய பதிவில் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பது நினைவுள்ளதா?

எழுதக் கூடியவனின் மதமும்/பின்னணியும் என்ன என்பது அவசியமில்லை எனக் கூறும் நீங்கள், அன்று நான் என் அனுபவம் சார்ந்த கருத்துக்களை கூறிய போது, ஒழுங்காக அந்த கருத்துக்களுக்கு மட்டுமே பதிலளித்திருந்தால் மேலே கண்ட வார்த்தைகளை கூறுவதற்கு உங்களுக்கு தகுதியிருக்கின்றது.

அன்று என் பதிவில் என் அனுபவ கருத்துக்களை ஓர் எள்ளலுடன் எதிர்கொண்ட உங்களுக்கு பதில் தர வேண்டும் என்பதற்காகவே உங்கள் பதிவுக்கு வந்தேன்.

வந்த இடத்தில் தான் நீங்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாற காரணமாக கூறிய "அந்த 9"(இதனை பதிலுக்கு பதில் எள்ளலாகவே எடுத்துக்கொள்ளுங்கள்) கேள்விகள் அடங்கிய பதிவை கண்டேன்.

53 வருட காலம் அனுபவம் உள்ளவர், 53 வருட ஆராய்ச்சியில் பைபிளில் கண்டது என்ன?

"கர்த்தர் இயேசுவை கைவிட்டார். காப்பாற்றவில்லை" - இது நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற கூறிய பிரதான காரணங்களில் ஒன்று.

சும்மா செவனே என்றிருந்த என்னை என் அனுபவ கருத்துக்களை எள்ளி இங்கே அழைத்து உங்கள் பதிவை படிக்க வைத்தீர்கள்.

நானோ உங்களை போன்று நாகரீகமின்றி செயல்படாமல், நீங்கள் கூறிய உங்களின் அனுபவ பைபிள் அறிவு சரியல்ல எனச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினேன்.

ஓர் நல்ல பேராசிரியர் என்ன செய்திருக்க வேண்டும்?

என் கேள்விக்கு தகுந்த விளக்கம் அளித்திருக்க வேண்டும். அக்கேள்வியில் நான் உங்களை எள்ளி நகையாடி ஒன்றும் பின்னூட்டம் இடவில்லையே.

ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த பின்னூட்டத்தையே இதுவரை அனுமதிக்கவில்லை.

இதுவா உங்கள் நடுநிலைமை?

உங்கள் கருத்துக்களையே என் கேள்வி குழிதோண்டி புதைக்கும் என்பதால் தானே இன்று வரை என்னுடைய அந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்கவில்லை.

நல்லடியார் போன்றவர்களின் பதிவுகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு //"அவர்களின் எள்ளல் தொனியிலான பதிவுகள் தான் காரணம்"// என காரணம் கூறியுள்ளீர்கள்.

உங்களின் "அந்த 9" கேள்விகள் பதிவில் போட்ட என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் இதுவரை அனுமதிக்காததற்கும் அதனை கண்டுகொள்ளாததற்கும் உண்மையில் அது தான் காரணமா? உங்கள் நெஞ்சைத் தொட்டு பதில் கூறுங்கள் பார்ப்போம்.

உங்கள் பதிவில் என் முதல் பின்னூட்டம், உங்களின் மதமாற்றத்திற்கு நீங்கள் குறிப்பிடும் காரணம் தவறானது என்று சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் மட்டும் தானே கேட்டிருந்தேன்.

கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ளும் நியாயவானாகிய 53 வருட அனுபவ பேராசிரியர் நீங்கள், குறைந்தபட்சம் அந்த என் பின்னூட்டத்தை மட்டுமாவது அனுமதிக்காததன் காரணம் - தங்களின் மதமாற்ற வைபவமே கேள்விக்குறியாகி விடும் என்பதனால் அல்லவோ?

என் பதிவில் வந்து, என் அனுபவ கருத்தை எள்ளியதோடு, உங்கள் பதிவில் என் நியாயமான கேள்வியை நீங்கள் புறக்கணித்ததும் தானே என்னை தொடர்ந்து உங்களை எள்ளி நகையாடி தொடர்பதிவுகளை போட வைத்தது. இதனை இல்லை என்று உங்களால் மறுக்க இயலுமா?

சரி கடந்து போனவைகள் அனைத்தையும் மறந்து விட்டு விடுவோம். வேண்டுமெனில் உங்களை எள்ளி நகையாடி நான் போட்ட பதிவுகளையும் வேண்டுமெனில் தூக்கி விடுகின்றேன்.

நீங்கள் கூறியது போன்று,

//கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன்.//

உங்கள் கருத்தை மட்டுமே வைத்து கேள்வி எழுப்புகின்றேன். நீங்கள் பதிலளிக்க தயாரா?

நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாற கூறிய காரணங்களுள் மிக முக்கியமானது, //"இயேசுவை கர்த்தரால் காப்பாற்றாதது".//

"பைபிளில் இயேசுவை கர்த்தர் காத்து இரட்சித்தார்" என்று வருவதாக நான் கூறுகின்றேன்.

இதனைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

என் கருத்தை ஒத்துக் கொண்டு உங்களின் கருத்தை திரும்பப்பெற்றுக் கொள்கின்றீர்களா?

நீங்கள் மதம் மாறுவதற்காக கூறிய காரணங்களில் தவறுகள் உள்ளன என ஒத்துக் கொள்கின்றீர்களா?

இல்லை, பைபிளில் அவ்வாறு கிடையவே கிடையாது; இயேசுவை கர்த்தர் காத்ததாக பைபிளில் வரவே இல்லை என உங்களின் 53 வருட பைபிள் அறிவை வைத்து என்னிடம் சவால் விடுகின்றீர்களா?

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் நீங்கள் குறைந்தபட்சம் இந்த பின்னூட்டத்தையாவது நடுநிலையுடன் அனுமதிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

(இந்த பதிவோடு சம்பந்தப்பட்ட நல்லடியாரின் பதிவிலும், என் வசதிக்காக என் பதிவிலும் இப்பின்னூட்டம் பதியப்படும்.)

பகுத்தறிவாளன்.

Thursday, April 19, 2007

தருமியும், அரை நூற்றாண்டு அனுபவமும்!

அரை நூற்றாண்டு அனுபவம், பேராசிரியர், 53 வருட பைபிள் ஆராய்ச்சி என ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டு, கிறிஸ்தவம் சரியல்ல; பைபிளில் சந்தேகம்; ஆகவே ஒன்றுமே சரியல்ல; எனவே நான் மதம் மாறி விட்டேன் எனக் கூறி தொடர்ந்து இன்று மற்ற மதத்தினரின் கொள்கைகள் மீது கேள்விகளை எழுப்பி வரும் திரு. தருமி அவர்கள், ஆரம்ப நாட்களில் இருந்து அவர் மதம் மாறியதற்கு அடுக்கிய காரணங்களை வைத்து நான் கேட்ட கேல்விக்கு இன்று வரை பதில் தராமல் அனுபவஸ்தர் வேடமணிந்து மற்றவர்களை ஏமாற்றி வருகிறார்.

இது தொடர்பாக நண்பர் நல்லடியார் அவர்களின் பதிவில் நான் போட்ட ஒரு பின்னூட்டம்:

//கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறுவதற்கான காரணங்கள் நியாயமானவையாகப்படவில்லை.//

Arokkiyam உள்ளவரின் கூற்றில் முழு உண்மையுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

அவர் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறியதற்கு கூறிய மிக முக்கிய காரணங்களில் ஒன்று:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்ற சம்பவமாகும். இவ்வாறு பைபிளில் வருவதை நம்ப இயலவில்லை எனவும், கர்த்தரின் மகனாகிய இயேசுவை அவரின் அனுமதியின்றி எப்படி யூதர்களால் கொல்ல முடிந்தது என்றும், தன்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாதவரால் மற்றவர்களை எப்படி இரட்சிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி அதனால் கிறிஸ்தவத்திலிருந்து மாறியதாக கூறினார்.

இதனை எதிர்த்து பைபிளில் அவ்வாறு இல்லை எனவும், அதற்கு மாறாக பைபிளில் இயேசுவை கர்த்தர் காத்து இரட்சித்ததாகத் தான் வருகிறது எனவும், எனவே நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற கூறிய காரணங்களில் இந்த காரணம் முழுக்க அபத்தமானது எனவும் கூறி அந்த நாட்களில் இருந்தே அவரிடம் நான் கேள்வி கேட்டு வருகிறேன்.

இதுநாள் வரை அவர் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

உண்மையிலேயே தனது வாதங்களில் நியாயம் உள்ளவராக இருந்தால், குறைந்தபட்சம் தான் ஒரு பேராசிரியர்(அவர் கூறிக் கொள்வது) எனவே பொய், பித்தலாட்டம் செய்யக் கூடாது என்ற எண்ணம் உள்ளவராக இருந்தால் எனது அந்த கேள்விக்கு அவர் பதில் கூற வேண்டுமா இல்லையா?

நண்பர் குழலி கூறுவது போன்று உண்மையிலேயே அரை நூற்றாண்டு அனுபவம், அதிலும் பைபிளை கரைத்துக் குடித்த அனுபவம் உள்ளவர் என்பது உண்மையானால் எனது ஆந்த கேள்விக்கு பதில் கூற தயங்குவது ஏன்?

இப்பொழுது கேள்வி ஒன்று தான்.

* தருமி கூறுவது போன்று இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக மட்டும் தான் பைபிளில் வருகிறதா?

* இல்லை நான் கூறுவது போன்று இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காத்து இரட்சித்ததாக பைபிளில் வருகிறதா?

நான் என் கூற்றில் உறுதியாக இருக்கின்றேன்.

பைபிளில், இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காத்து இரட்சித்ததாக தெளிவாக வருகின்றது. அதனை என்னால் பைபிளை வைத்து நிரூபிக்க இயலும்.

இல்லை. அவ்வாறு பைபிளில் கிடையவே கிடையாது என அரை நூற்றாண்டு(50 வருட) பைபிள் அனுபமுடைய முன்னாள் கிறிஸ்தவரான, பேராசிரியரான தருமியால் உறுதியாக கூறி அவ்வாறு இல்லை என நிரூபிக்க இயலுமா?

50 வருடமாக பைபிளோடு ஒட்டி உறவாடிய பேராசிரியர் அனுபவஸ்தர் தருமி அவர்களின் மதம் மாற்றத்திற்கான இந்த காரணம் என்னால் உடைக்கப்பட்டால், ஏதோ அனைத்து மதங்களையும் கரைத்துக் குடித்தது போன்று மற்ற மதங்களின் மீது அவர் வைக்கும் வாதங்கள் அனைத்தும் குழப்பமானவையே என்பது உடைபட்டு போகும் என்பதனால் தான் நல்ல அனுபவஸ்தரான, பேராசிரியர் அவர்கள் என் கேள்வியை கடந்த அரை ஆண்டுகளாக சட்டையே செய்யாமல் திரும்பத் திரும்ப இஸ்லாத்தின் மீது கேள்விகளை சுட்டி வருகிறார்.

அவருக்கு முழுமையாக பைபிளைக் குறித்தே போதிய அறிவு இல்லை என என்னால் நிரூபணமானால் நண்பர் குழலி போன்று, அவர் மீது மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ள வலைப்பதிவர்களுக்கு முன்னிலையில் தந்து முகத்தை எங்கே கொண்டு அவர் வைத்துக் கொள்வார்? அதனால் தான் என் கேள்வியை இதுவரை அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை.

நண்பர் குழலி அவர்களுக்கு நான் விரும்பிக் கேட்டுக் கொள்வது ஒன்றே. தாங்கள் நினைப்பது போல் இவருக்கு உண்மையிலேயே அரை ஆண்டு அனுபவம்(முக்கியமாக பைபிளில்) இருப்பது உண்மையானால், அவரது கருத்துக்கள் அனைத்தும் நிதர்சனமானவை, உண்மையானவை என்றால் என் கேள்விக்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும். என்னோடு அவர் விவாதத்திற்கு வரட்டும். அதற்கு தங்களைப் போன்றவர்கள் அவரை வற்புறுத்த வேண்டும்.

அவர் மதம் மாறுவதற்கு கூறிய காரணம் உண்மை என அவர் முதலில் நிரூபித்து விட்டு அதற்குப் பிறகு அவர் அறியாத மற்ற மதங்களின் கொள்கைகள் மீது கேள்விகளை அடுக்கட்டும்.

Thursday, November 23, 2006

தேவகுமாரன் என்றால் தெய்வத்தின் மகனா?

கேள்வி: 3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும்
இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள்
ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு
தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.

பதில்: இது பற்றி எனக்கு தெரியாது .பைபிளில் எங்கே சொல்லியிருக்குண்ணு சொன்னா
படிச்சிட்டு சொல்லுறேன்.

மேல ஒள்ளது நண்பர் ஜோகிட்ட நா கேட்ட கேள்வியும் அதுக்கு அவரு சொன்ன பதிலும். எனக்கு நண்பர் ஜோகிட்ட பிடிச்ச ஒரு விசியம் இது தான். தனக்கு தெரியாத்தத தெரியாதுன்னு பட்டுன்னு சொல்லூதும் தப்பு தங்கிட்டயே இருந்தாலும் தப்ப தப்புன்னு சொல்லூதும் தான். இது சாதாரணமா மெத்தப்படித்த "பேராசிரியர்கள்ட்ட" இருக்கணும்.

ஆனா நெலம இங்க அப்படியே மாறியிருக்கு. அந்த விசியத்துக்கு கடைசீல வாரேன். மொதல்ல நண்பர் ஜோவுக்கு பதில்.

1. இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.

2. இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.

3. இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். (புதிய ஏற்பாடு. எபிரேயர், அதிகாரம் 7)

மேல காணூது சத்தியமா நா எழுதுன பைபிள்ல ஒள்ளது இல்லீங்க. நா விசியம் தெரிஞ்சிக்கிடதுக்காக படிக்கிற கிறிஸ்த்தவர்கள் பயன்படுத்துற பைபிள்ல ஒள்ளதுங்க.

இந்த வசனத்துல சொல்லப்படற மெல்கிசேதேக்கு அப்படீங்கற ஆளு தாயும் தந்தயும் இல்லாதவன்னும், ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் "தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவன்னும்" பைபிள் தெளிவா சொல்லுது.

ஏசுவ கர்த்தரோட மகன்னு சொல்லி அவரையே கர்த்தரா கொண்டாடுற கிறிஸ்த்தவர்கள் அவருக்கு ஒப்பானவன்னு சொன்ன இந்த மெல்கிசேதேக்க கண்டுக்கவே இல்ல.

ஒரு பெண்(கன்னி) வயிற்றில பிறந்த ஏசுவ விட தாயும் தந்தயும் இல்லாத மெல்கிசேதேக்கு எந்த வகைல கொறச்சல். அதுமட்டுமில்ல. ஒரு பெண் வயித்துல பிறக்கறவன குறிச்சு இதே பைபிளு என்ன சொல்லுது?

ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன், சுத்தமாய் இருப்பது எப்படி? (யோபு 25:4)

அப்படீன்னா பைபிள்படி சுத்தமில்லாத ஏசுவ விட சுத்தமுள்ள மெல்கிசேதேக்கு உயர்ந்தவனில்லையா?

அந்த மெல்கிசேதேக்கப்பத்தி தொடந்து வரூத பாருங்க.

4. இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.

5. லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.

6.ஆகிலும், அவர்களுடைய வம்ச வரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.

7. சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.

8. அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.

இன்னிக்கு உள்ள ஒலக ஜனங்கள்ல பெரிய ஒரு தொகைக்கு(கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள்) தந்தையான ஆபிரகாமுக்கே ஆசீர்வாதம் வழங்கக்கூடிய அளவுக்கு பெரியவன் தான் இந்த மெல்கிசேதேக்கு.

அத மேல கண்ட 7 ஆவது வசனமும் தெளிவா சொல்லுது. ஆபிரகாம விட மெல்கிசேதேக்கு பெரியவன் அப்படீன்னு.
மேல ஒள்ளதிலருந்து மெல்கிசேதேக்குங்குறவரு,

1. ஆபிரகாமுக்கு ஆசி வழங்கும் அளவிற்கு உயர்ந்தவர்.
2. தந்தையும் தாயும் இல்லாதவர்.
3. ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.
4. இன்றுவரை இனியும் உயிரோடிருப்பவர்.

தெய்வமுன்னு சொல்லூதுக்கு ஒள்ள எல்லா தகுதியும் ஒள்ள இவர பைபிள பின்பற்றக்கூடிய கிறிஸ்த்தவர்கள் ஏன் கண்டுக்கிடல?

ஏன்னா இப்படி ஒரு விசியம் பைபிள்ல இருக்கூதே சாமான்ய கிறிஸ்த்தவர்களுக்கு தெரியாது. மெத்த படிச்ச, 45 வருச அனுபமுள்ள, எல்லாத்தயும் படிச்சு முடிச்சுட்டேன்னு தம்பட்டம் அடிச்சிக்கிட்டு மதம் மாறுன தருமி அய்யாவுக்கே பைபிள்ல ஒள்ள ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விசியத்தப்பத்தி அதுவும் அவுரு கிறிஸ்த்தவத்திலருந்து மதம் மாறூதுக்கு காரணமா சொன்னதுல உள்ள ஒரு விசியத்தப்பத்தி தெரியல. பின்ன எப்படி சாமானிய மக்களுக்குத் தெரியும்?

Sunday, November 05, 2006

ஜோவும் மட்டுறுத்தலும் - காப்பாற்றப்படும் நிறமி.

மட்டுறுத்தல தமிழ்மணம் கட்டாயமாக்குனது, பூந்து வெளயாடும் அனானிமஸ்களுக்கு தலவலியானதோ இல்லியோ சில தலவலியான பின்னூட்டங்கள்லருந்து தன்ன காப்பாத்திக்கிட சில "நேர்ம"யாளர்களுக்கு ரொம்பவே ஒதவுது போங்க.

அதுல ஒராளு தான் தமிழ்மணத்துல "மதம் மாறுன" கதயோட பிரபலமான தருமி அய்யா. அவருகிட்ட சில கேள்விகளோட நா போட்ட பின்னூட்டத்த இதுவர அவரு அனுமதிக்கவே இல்ல. பூந்து வெளாடும் அனானிகளுக்கு கூட அந்த நேரத்துல எடம் கொடுத்த அவரு பதிவுக்கு பகுத்தறிவாளன் பின்னூட்டமுன்னா அத்தன அலர்ஜியா என்ன? கர்த்தருக்கே வெளிச்சம்.

அவரு பதிவுல அனுமதிக்காட்டி என்ன. அவரு எங்கல்லாம் பின்னூட்டுகிறாரோ அங்கெல்லாம் போய் அவருகிட்ட கேக்கலாமுன்னு முடிவோட பல எடங்கள்ல அதே கேள்விய அவர்கிட்ட கேட்டிருக்கேன்.

கேள்வி நாயமானதுன்னா நேர்மயானவங்க அத அனுமதிப்பாங்க. என்னோட கேள்வி நாயமானதுன்னு தான் நா நெனச்சிட்டிருந்தேன். ஏன்னா பல பேரு அத அவிங்க பதிவுல அனுமதிச்சிருக்காங்க. ஆனா திடீருன்னு இப்ப எனக்கு என்னோட கேள்வி நாயமானது தானான்னு சந்தேகம் வந்துடுச்சி. ஏன்னா நண்பர் ஜோவுட இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி) பதிவுல என்னோட அந்த கேள்விய கேட்டிருந்தேன். கேட்டு 25 நாளுக்கு மேல ஆயிடிச்சு. இப்ப வர அத அவரு அனுமதிக்கவே இல்லை.

ஒருவேள எங்கேள்வி நாயமில்லாம இருக்கலாமில்லியா. நீங்களே பாருங்க. பாத்து என்னோட கேள்வி நாயமா இல்லையான்னு ஒரு வார்த்த சொல்லீருங்க.

என்னோட பின்னூட்டம்:

// நீங்க யார் யார் என்ன சொன்னார்-ன்னு தெரிந்து கொண்டதால யோசிக்க போயிட்டீங்க .//

நல்லா வார்ரீங்க ஜோ. சரியான காமெடி போங்க.

முழுசா தன்னோட முன்னாள் மதத்தோட வேதப்புத்தகத்தில என்ன இருக்குன்னு கூட தெரிஞ்சுகிடாத்தவரு மற்றத பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டாருன்னு நெனக்கிறீங்களா ?

அவரு மதம் மாற கூறிய காரணங்கள்ல முக்கியமானது "சிலுவைல அறையப்பட்ட இறைமகனால தன்ன காப்பாத்திக்கவோ இல்லேன்னா இறைவனே அவர காப்பாத்த முயற்சிக்காத்தது" தான். "இறைமகன்னு உரிமை கொண்டாடினவர கடைசி சமயத்துல கர்த்தரே கைவிட்டுட்டதால கிறித்தவ மதத்து மேல சந்தேகம் வந்து வெளியேறிட்டாராம்.

இது தப்பு. பைபிள்ல அப்படி இல்ல. ஏசுவோட பிரார்த்தனய கர்த்தர் ஏற்றுக் கொண்டு அவர காப்பாத்தினதா வருதேன்னு அந்த நாள் முதலா இவர்கிட்ட கேள்விகேட்டுட்டு இருக்கேன்.

மொதல்ல அவரு பதிவுல இதக்கேட்டு போட்ட பின்னூட்டத்த இதுவர அவரு அனுமதிக்கவே இல்ல.

அதுக்குப்பிறகு இவரு போவக்கூடிய சில இடங்கள்லயும் இதே கேள்விய வச்சு நா பின்னூட்டம் போட்டாச்சு. இது வர பதில் இல்ல. அதயெல்லாம் இவரு பாத்திருக்க மாட்டாருன்னா நெனக்கிறீங்க ?

அவரு மட்டும் தான் கேள்வி கேப்பாரு மத்தவங்கல்லாம் பதிலு சொல்லீட்டு போவணும். அவரு மட்டும் யாருக்கும் பதிலு சொல்ல மாட்டாருன்னா அதுக்கு என்ன் அர்த்தம்.

அதுனால நா கேட்டுக்கொள்வதெல்லாம் இவருக்கு பதில் கொடுக்கூத மொதல்ல நிறுத்துங்கோ. கேள்வி கேப்பாரு பதில குடுத்தா ஆளக் காணாது. வேற ஏதாவது கேள்வி கேட்டா அந்த தெசேலயே காணாது.

அதுனால இங்கயும் நா அவருக்கிட்ட அதே கேள்விய கேக்கேன்.

பைபிள்ல இயேசுவ சிலுவைல அறையும் போது அவரு கேட்ட பிரார்த்தனய கர்த்தர் கேட்டு அவர காப்பாத்தினதா வருதுன்னு நா சொல்றேன்.

இதக்குறிச்சு என்னோட விவாதிக்க தருமி அய்யா தயாரா ?

இது பதிவுக்கு தொடர்பில்லன்னு நண்பர் ஜோ நெனச்சா தாராளமா அனுமதிக்காம இருக்கலாம்.

அப்புறம் நண்பர் ஜோகிட்டயும் ஒரு கேள்வி:

ஏசு தந்தையில்லாம பிறந்தத ஒரு சிறப்புன்னு சொல்றீங்க. அத வச்சு நீங்க என்ன கூற வரீங்க ? தந்த இல்லாம பிறந்ததாலயும் பைபிள்ல அவர இறைமகன்னு வரனாலயும் அவர இறைமகன்னு நீங்க கூற வரீங்கன்னா ,

1. மொத மனுசன் ஆதாமுக்கு தந்தயும் தாயும் இல்லையே அதனால அவர ஏன் இறை மகன்னு சொல்லல?

2. அவரோட மனைவி ஏவாளுக்கும் தந்தயோ தாயோ இல்லையே அதவச்சு ஏன் அவர இறைமகள்னு சொல்லல?

3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.

4. பைபிள்ல ஏசு இல்லாம இன்னும் பலர இறை மகன்னும் அவர்களின் தந்த கர்த்தருன்னும் வருதே. அப்போ ஏன் அவர்கள்லாம் இறைமகன்களாக கிறித்தவர்களால் கருதப்படல?

அப்புறம் கடைசியா ஒரு கேள்வி கூட ,

5. ஏசு திரும்ப வருவார்னு முஸ்லிம்களும் கிறித்தவர்களும் ஒண்ணு போல நம்புறாங்க. அதுக்கு நெறய முஸ்லிம்கள் இங்க அவங்க நம்பிக்கயயும் வெளக்கமும் கொடுத்துட்டாங்க. ஏசு திரும்ப வரூதப்பத்தியும் திரும்ப அவரு வந்து என்ன செய்வாருன்னும் கிறித்தவர்கள் நம்பறதப் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லலியே ? ஏசு திரும்ப வந்து என்ன செய்வாருன்னு கிறித்தவர்களோட நம்பிக்கயப்பத்தி நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

இதுக்கு நண்பர் ஜோ கொடுத்த பதில்:

பகுத்தறிவாளன்,
உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.


பதிலப்பாத்தா ஏதோ எம்பின்னூட்டத்துல அவருகிட்ட கேட்ட கேள்விய மட்டும் அனுமதிச்சு பாக்கி பாதிய மறச்சது போல தோணும். ஆனா மொத்த பின்னூட்டத்தயுமே மறச்சுட்டு " முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன் " அப்பிடீன்னு ஃபீல் பண்ணியிருக்காரு.

இதுக்கு நா மீண்டும் போட்ட பதில் பின்னூட்டம்:

//பகுத்தறிவாளன் ,
உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.//

என்ன ஜோ என்ன ஆச்சு?

ஏதோ என் பின்னூட்டத்துல கொஞ்சத்த வெளியிட்டு பாக்கிய மறச்சது போல சொல்லியிருக்கீங்க.

என்னா என் பின்னூட்டத்துல ஏதாவது தப்பா கண்டீங்களா ? அப்படீன்னா அதுக்கான வெளக்கத்த கொடுத்திருக்கலாம்ல. ?

நா ஒங்ககிட்ட கேட்டதுக்கு பதில் சொல்றது இருக்கட்டும். நா என்ன கேட்டேன்னு ஒள்ளதயாவது வெளியிடலாம்ல?

இந்த எல்லா "லாம்ல"க்கும் ஒங்ககிட்ட இருந்து நா பதில எதிர்பார்க்கலாமா ?

சத்தியமா இதயும் இன்னும் அவரு அனுமதிக்கவே இல்லைங்க.

இது நாயமாங்க? இல்ல என்னோட கேள்வீலயோ பதில் பின்னூட்டத்துலயோ ஏதாவது தப்பு இருக்கா? ஒண்ணுமே புரியலீங்க.

ஒருவேள இதுதான் "வலைப்பதிவு அரசியலோ"?

Thursday, June 15, 2006

நண்பர் வசந்தன் அவர்களுக்கு........

//விவிலியத்தில் எங்குமே நீங்கள் சொன்னவாறு சொல்லப்படவில்லை. இயேசு உயிர்நீத்தது, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது, உயிர்த்தெழுந்தது என்றவாறு தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் பைபிள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.//

விடமாட்டீர்கள் போல் உள்ளது.

நான் இக்கேள்வியை வைத்தது தருமி சாருக்காக. தான் மதம் மாறியதற்கான காரணமாக "இயேசுவின் சிலுவை மரணத்தைக்" குறிப்பிட்டதை நான் அவ்வாறு பைபிளில் இல்லையே என்று மறுத்தேன். மட்டுமல்ல இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக உள்ளதே என்றும் கேள்வியை வைத்தேன்.

கிறிஸ்த்தவர்களின் மத அடிப்படையையே தகர்க்கும் இக்கேள்வியை தருமி அவர்கள் திரும்பி கூட பார்க்கவில்லை.

இதே விஷயத்தை நான் நண்பர் இராகவன் பதிவில் அவருடைய ஒரு கேள்விக்கு பதிலாக வைத்திருந்தேன். அதை இது வரை யாரும் சீண்டி கூட பார்க்கவில்லை.

எல்லோருக்கும் பயம். என்னிடம் அப்படி எங்கே இருக்கிறது எனக் கேட்டு நான் எடுத்துக் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். முக்கியமாக இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஒரு கிறிஸ்த்தவருக்கு கூட "பைபிளில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை" என்று உறுதியாக கூற தைரியம் வராதது தான்.

பைபிளை முழுமையாக படித்திருந்தால் அல்லவா இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் பொழுது இவர்களால் பதிலளிக்க முடியும்.

எது எப்படி இருந்தாலும் இது வரை யாருமே கூறாத நான் எதிர்பார்த்த பதிலோடு நண்பர் வசந்தன் அவர்கள் வந்துள்ளார்கள்.

பரவாயில்லை. தருமி அவர்களை இக்கேள்வியை வைத்து அவர் "மதம் மாறியதை" கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். அவரிடம் தான் இதற்கான பதிலை கூற வேண்டுமா என்ன?

வசந்தன் அவர்களே உங்களிடம் இதற்கான பதிலை, அதாவது "இயேசுவை கர்த்தர் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றினார்" என்பதற்கு ஆதாரம் நிச்சயமாக பைபிளிலிருந்து என்னால் கொடுக்க முடியும். அதற்கு முன் உங்கள் பதிலிலிருந்து சில சந்தேகங்கள் கேள்விகள் எழுந்துள்ளன. அதனை நீங்கள் எனக்கு தெளிவு படுத்த முடியுமா?

//நீங்கள் பைபிள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.// என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

நான் நினைத்துக் கொண்டிருப்பது புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் அடங்கிய கிறிஸ்தவர்கள் வேத நூலாக கருதுவதைத் தான் பைபிள் என நினைக்கிறேன்.(தேவையெனில் என்னிடம் இருக்கும் பைபிளின் அச்சக பதிப்பு விவரங்களை தருகிறேன்.)

இனி நீங்கள் எதை பைபிள் என்று கருதுகிறீர்கள் என்பதை கூற முடியுமா? ஏனெனில் நான் ஆதாரத்தை எடுத்து தரும் போது இது பைபிள் அல்ல என்று கூறி விடக் கூடாது அல்லவா?

//நீங்கள் சொல்வது போல் பவுல் அவர்களால் செருகப்பட்டிப்பதாக சொல்வதும் புரியவில்லை. பவுலின் திருமுகங்கள் எவையும் இயேசுவின் வாழ்க்கைக் காலத்தைச் சொல்வதில்லை.//

இல்லை தான். ஆனால் இயேசு பின்பற்றிய கர்த்தரின் சட்டதிட்டங்களை மாற்றி இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு அடிகோலியவர் பவுல் என்கிறேன். இதற்கு என்னால் பவுலின் நிரூபங்களிலிருந்தும்(புறஜாதியருக்கு எழுதிய கடிதங்களிலிருந்து)அதற்கு எதிரான கொள்கைகளை பைபிளிலிருந்தும் என்னால் எடுத்து காண்பிக்க இயலும்.

//இயேசுவின் வாழ்க்கையை எழுதியவர்கள் நால்வர் மட்டுமே.//

அது இன்று நிலுவையில் இருக்கும் புதிய ஏற்பாட்டின் படி. ஆனால் இயேசுவின் வாழ்க்கையை எழுதியவர்கள் உண்மையில் நால்வர் தானா? யோசித்துப் பாருங்கள்.

//இயேசுவை என்று நீங்கள்தான் அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளீர்கள். அடைப்புக்குறிக்குள் சொல்வது குர்-ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் முறை.//

நான் பைபிளில் வரும் வசனத்திலிருந்து ஒரு பகுதியை தான் எடுத்து வைத்தேன். அது அதற்கு முந்தைய வசனத்தின் படி புரிய வேண்டுமென்பதற்காகத் தான் இயேசுவை அடைப்புக் குறியில் இட்டேன். முழுவசனத்தையும் காண்பிக்கும் பொழுது இதற்கான தேவையிருக்காது. குரானுக்கு விளக்கம் கொடுக்கும் முறையை பற்றி தேவையெனில் மற்றொரு பதில் பார்ப்போம். இது அதற்கான இடம் இல்லை.

//விவிலியத்தில் கர்த்தர் என்பது இயேசுவைத்தான் குறிக்கிறது.//


உங்கள் பதிலிலிருந்து என்னுடைய முக்கியமான கேள்வியே இதனைக் குறித்து தான்.

நான் "இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காப்பாற்றினார்" என்கிறேன். அதுவும் பைபிளில் வருகிறது என்கிறேன்.

நீங்கள் இயேசு தான் கர்த்தர் என்கிறீர்கள். நீங்கள் கூறுவது உண்மையெனில் நான் கூறும் விஷயமே அடிபட்டு போகும். நீங்களும் பைபிளில் வரும் கர்த்தர் என்ற வார்த்தை இயேசுவை குறிப்பதாக கூறியிருக்கிறீர்கள்.

இதற்கு ஆதாரத்தை அதாவது "இயேசு தான் கர்த்தர்" என்பதாக பைபிளில் எங்கு வருகிறது என்று சற்று காண்பியுங்களேன்.

இயேசு அவ்வாறு கூறியதாகவோ அல்லது பரிசுத்த ஆவி அவ்வாறு கூறியதாகவோ அல்லது கர்த்தர் அவ்வாறு கூறியதாகவோ அல்லது ஏதாவது அசரீரி அவ்வாறு கூறியதாகவோ பைபிளிலிருந்து ஒரு வசனத்தையாவது நீங்கள் காண்பிக்க இயலுமா?

அதற்கு முன் நான் உங்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சிந்திப்பதற்கும் எனக்கு விளக்குவதற்கும் பைபிளிலிருந்து ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.


"ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்."


மேலே குறிப்பிட்ட வசனம் இயேசுவை சிலுவையில் அறைந்த பொழுது அதிலிருந்து அவர் செய்த பிரார்த்தனை அல்லது அழைப்பாகும். இது தங்களுக்கு நன்றாக தெரியும் என நினைக்கிறேன். புதிய ஏற்பாட்டில் மத்தேயு 27 ஆவது அதிகாரம் 46 ஆவது வசனமாக மேற்கண்ட வசம் வருகிறது.

நீங்கள் "இயேசு தான் கர்த்தர்" என்பதற்கான ஆதாரத்தை வைக்கும் பொழுது மேற்கண்ட வசனத்தில் "இயேசு அழைத்தது யாரை" என்பதையும் சற்று விவரிக்க கோருகிறேன்.

Monday, June 12, 2006

விடை தெரியா பின்னூட்டங்கள் - 2

நல்லடியாருடைய "யாகாவாராயினும் நாகாக்க" பதிவில் நண்பர் ஜோ அவர்கள் எழுதிய பின்னூட்டத்திற்கு நான் இட்ட பதில் பின்னுட்டம்.


//இஸ்லாத்தில் இருக்கும் சிலருக்கே இஸ்லாம் பற்றி சரியாக தெரிவதில்லை என்று ஒப்புக்கொள்ளும்//

நண்பரே இதத்தான் நா பல எடங்கள்ல மாங்கு மாங்குன்னு கத்திகிட்டு இருக்கேன். இத்த நம்ம தருமி சாரு ஒத்துக்கிட்டாரான்னு மொதல்ல பாருங்க.

பைபிள்ள இருப்பதப் பத்தி ஒரு கேள்வி கேட்டத மரியாதய்க்கு கூட இது வர பிரசுரிக்காத்தவரு, தன்ன மொதல்ல அடயாளப்படுத்துன பைபிள்ள இருப்பதயே முழுமையா தெரியாத்தவரு, தான் மதம் மாறுனதுக்கு தன்னோட மதத்தப்பத்தி தவறான ஒரு காரணத்த கொடுக்கும் போது மத்த மதத்தப் பத்தி எந்த அளவுக்கு இவருக்கு தெரிஞ்சிருக்கும்.

"யாகாவாராயினும் நாகாக்க" என்பதன் அர்த்தம் பேராசிரியரான அவருக்கேத் தெரியாதா என்ன? அத்த நாபகப் படுத்தத் தான் நல்லடியாரு இந்த தலப்ப வச்சாராயிருக்கும். சரியா தான் வச்சிருக்காரு.

இஸ்லாமும் கிறித்துவமும் ஒரு தந்த மதங்கள் என்பத அறிஞ்ச தருமி அய்யா, அதில ஒண்ணுல பெறந்து வளந்தவருக்கு மத்த மதத்துடைய அடிப்படய(ஆதத்தின் மனைவி பெயர் இஸ்லாத்தில் கூறப்படவில்லை என்ற அவரின் கண்டுபிடித்தல்) கூட தெரியவில்லயின்னா அவரு எந்த அளவுக்கு மதத்த ஆராய்ச்சி பண்ணியிருப்பாருன்னு வெளங்குதுல்லியா.

சரி அவரு பேராசிரியரு ஆனதுனால அவருக்கு மரியாத கொடுக்கணுமின்னு நீங்க அவருக்கு வக்காலத்து வாங்கியிருக்கீங்கன்னா நானும் ஒங்க கச்சி தான்.

ஆனா அவருடைய "மதம் மாறுன கதய" விமர்ப்பதின் அடிப்படைல கூறுனா நா நல்லடியாருடைய கச்சி தான்.

ஒண்ண பத்தி ஒரு கருத்து கூறுவதுக்கு முன்னாடி அத்த பத்தி தீர ஆய்ந்து முடியவில்லயின்னா யாரிடமாவது கேட்டு தெரிஞ்சிகிட்டு கருத்து சொல்லுவதல்லவா சிறந்தது. இது கூடவா பேராசிரியரான தருமி சாருக்கு தெரியல.

//அடுத்தவர் அறிந்து கொள்ளும் முகமாக கேட்கும் கேள்விகளில்//

இது ரொம்ப ஓவரா ஒங்களுக்கு தெரியலியா?

நம்ம தருமி சாரு என்ன அறிந்து கொள்ளவா அந்த கேள்விகள கேட்டாரு. மொதல்லயே தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்த பின்னாடி தான் அந்த முடிவுக்கு வரக் காரணம் என்ன அப்பிடீன்னு தானே அவரு காரணங்கள அடுக்கினாரு. அதுல இருக்க தப்ப சுட்டிக்காட்டினா தன்னோட முந்தய முடிவ மறுபரிசீலனைக்கு உட்படுத்தறேன்னு சொல்றது தானே "அறிந்து கொள்ள" கேட்பவருக்கு அழகு. ஆனா அவரு இது வர அப்பிடி ஒரு வார்த்த சொல்லியிருக்காரா?

//முடிந்தால் விளக்கம் கூறி புரிய வைக்க முயலுங்கள்//

இது நல்ல வாசகம் தான். ஆனா நீ எப்படி சொன்னாலும் நா என் முடிவில இருந்து மாறமாட்டேன்னு சொல்லறவகளுக்கு இது சரியாகுமான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

Sunday, June 11, 2006

விடைதெரியா பின்னூட்டங்கள் - 1

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களை மட்டுறுத்தும் நிபந்தனையைக்
கொண்டு வந்ததால் போலிகளின் ஆபாசத் தாக்குதல்கள் குறைந்ததோ இல்லையோ நியாயமான தங்களது கருத்துக்கு எதிரான கேள்விகளைக் கொண்டு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது மட்டும் ஜோராக நடக்கிறது. பின்னூட்ட மட்டுறுத்தல் மூலம் பயனடைந்தவர்களில் இப்படிப்பட்டவர்கள் தான் அதிகம்.

"மதம் மாறிய தொடர்" தருமி அவர்களை தமிழ்மணம் அறிந்த தமிழர்கள் அனைவரும் அறிவர். இவர் மதம் மாறியதன் 9(தற்போது 21) காரணங்களில் மிக முக்கியமான காரணமாக அவர் தெரிவித்த "இயேசுவின் சிலுவை மரணம்" குறித்து நான் எழுப்பிய கேள்வியை அவர் அவருடைய பதிவில் குறைந்தபட்சம் அனுமதிக்கக்கூட இல்லை.

தொடர்ந்து அவர் செல்லும் சில இடங்களில் அக்கேள்வியை சார்ந்து நான் வைக்கும் கேள்வியையும் இதுவரை அவர் கண்டு கொண்டதே இல்லை. அங்கும் சில இடங்களில் என் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

எனவே பெரியவர் டோண்டு அவர்களின் பாணியை கடைபிடிக்கலாம் என முடிவெடுத்து முதல் பதிவாக இதனை வைக்கிறேன். இனி எங்கெல்லாம் என் நியாயமான கேள்விகளை வைத்து பின்னூட்டுகிறேனோ அவையெல்லாம் பதிவுகளாக இங்கு தொகுக்கப்படும்.(அவை அங்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படவில்லையெனினும்).

நல்லடியார் அவர்களின் பெண்ணியம் முதல் பதிவில் நான் இவ்வாறு பின்னூட்டியிருந்தேன்.


//முன்னாள் கிறிஸ்தவர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட ஒரு பெண்ணியவாதி//

தருமியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

சரி தான் எனில், பிழைத்து போகட்டும். விட்டு விடுங்கள்.

அவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளி வருவதற்கு காரணமாக அடுக்கிய ஒம்போது காரணங்களில் முக்கிய காரணமான "இயேசு சிலுவையில் உயிர் நீத்ததைக்" குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதிலே வரவில்லை. குறைந்த பட்சம் நாகரிகம் கருதி அக்கேள்வியை பிரசுரிக்க கூட இல்லை.

இவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளிவந்தவர் தானா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.

தெளிவாக சொல்வதெனில் இவர் பைபிளையே ஒழுங்காக படிக்கவில்லை என்பது என் கேள்வியை மறைத்ததிலிருந்தே தெரிகிறது.

அப்படி இருக்கையில் குரானைக் குறித்தும் இஸ்லாத்தைக் குறித்தும் இவருக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது.

அது தான் அவருடைய இஸ்லாத்தில் ஏவாளுக்கு பெயரே இல்லை என்ற வெளிப்படுத்தல்.

யார் யாரோ கக்குவதை இவர் வாந்தியெடுப்பது தெளிவாகத் தெரிகிறது. போகட்டும் ச.... விட்டுத்தள்ளுங்கள்.


நல்லடியாரின் பெண்ணியம் இரண்டாவது பதிவில் தமிழ்செல்வன் அவர்களின் பின்னூட்டமும் அதற்கு தருமி அவர்களின் பதிலும்:


"அட தருமி அய்யா. ஆச்சரியமாக இருக்கிறது! நீங்கள் வலைப்பதிவில் இருக்கிறீர்களா? தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதற்கு முந்தைய திரு. நல்லடியார் அவர்களின் "பெண்ணிய" பதிவில் ஏதோ இரண்டு "பகுத்தறிவாள" அரைவேக்காடுகள் உங்களை குறித்து ஏதோ கூறியதாக ஞாபகம். நீங்கள் பதில் கூறுவீர்கள் என எதிர் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

இதுவரை அதில் உங்கள் மறுமொழியினை காணாததால் கேட்டேன்."

இதற்கு தருமி அவர்களின் பதில்:


"தமிழ்ச்செல்வன்,
உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன்.
என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க...என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!! அதோடு நதியைக் கடக்க தன் தோளில் பெண்ணைத் தூக்கிச் சென்ற குருவைப்பார்த்து சீடர்கள் கேட்ட கேள்வியும், குருவின் பதிலும் நினைவுக்கு வந்தன."

இதற்கு நான் வைத்த பதில்,


//தமிழ்ச்செல்வன்,
உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன்.
என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க...என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!!//

நழுவல் அருமை.

எப்படி உங்களால் மட்டும் இதற்கு முடிகிறது?

"நான் ஏன் மதம் மாறினேன்" என்று காரணங்களை அடுக்குவீர்கள்.

அவைகளில் பல அபத்தங்கள் உள்ளனவே எனச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்டால், "ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்" என புழகாங்கிதமடைந்து யாராலும் வழங்க முடியாத அதியற்புத பதிலைத் தருவீர்கள்.

"மதம் மாறிய" தொடர் பதிவுகளின் காரணமென்ன என இப்பொழுது தெளிவாக விளங்குகிறது.

ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம் நடத்துங்க.


//அதற்காகவே அந்த மதங்களைப் பற்றி என் ஆய்வை கொஞ்சம் விஸ்தாரமாக வைத்தேன்.//

இது "நான் ஏன் மதம் மாறினேன் - 5" -ல் தருமி வைத்தது.

இவருடைய விஸ்தாரமான ஆய்வில் அவர் கண்டு கொண்ட உண்மை,

1. "இஸ்லாத்தில் முதல் மனிதன் ஆதமுடைய மனைவிக்கு பெயர் இல்லை"
2. "கிறிஸ்தவ கடவுள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக பைபிளில் வருகிறது"

இதில் முதல் விஷயத்தைக் குறித்து என்ன கூற - சரி இஸ்லாமியரல்லாத அவர் முழுமையாக குரானை ஆய்வு செய்வது சாத்தியமில்லை என விட்டு விடலாம்.

ஆனால் இரண்டாவது விஷயம்!?

பைபிளில் இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக வருகிறதே என கிறிஸ்தவரல்லாத நான் எழுப்பிய கேள்வி இன்னும் தொங்கிக் கொண்டு நிற்கிறது.

அவர் மதம் மாற காரணங்களில் முக்கிய காரணமாக இதனை வேறு படுத்தியுள்ளார். லாஜிக்கே அடிபடுகிறது.

ஒரு கிறிஸ்தவரான அவருக்கே இது தெரியவில்லை எனில் அவருடைய விஸ்தாரமான ஆய்வை குறித்து(தனது வேத புத்தகத்தைக் குறித்தே சரியான பார்வையில்லாத போது) என்ன சொல்ல?

இனி இதற்கு கூட அவரிடமிருந்து ஆழ்ந்த விஸ்தாரமான அபூர்வ பதிலாக, "ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்" - இதனை எதிர்பார்க்கலாம்.

இவன் என்னடா அவருடைய பதிவில் வைக்க வேண்டிய பின்னூட்டத்தை இங்கு வைக்கிறானே என்றொரு கேள்வி எழலாம்.

நான் இது தொடர்பாக ஏற்கெனவே அவர் பதிவில் வைத்த பின்னூட்டத்தை ஒரு மரியாதைக்கேனும் இதுவரை பிரசுரிக்காத அவருடைய விசால மனதை நம்பி எப்படி அங்கு வைப்பது. அதனால் தான் அவர் புழங்கும் நியாயமான பின்னூட்டங்களை அனுமதிக்கும் இது போன்ற இடங்களில் இதனை பதிப்பித்து போகிறேன்.

இதே பதிவில் இன்னொரு பகுத்தறிவாளன் வைத்த பின்னூட்டத்திற்கு நான் வைத்த பதில். (இது நாங்கு நாட்களாகியும் இதுவரை நல்லடியார் அவர்களால் அனுமதிக்கப்படவில்லை)
//

ஒரு பேச்சுக்கு உங்கள் வீட்டுப் பெண்களில் ஒருவர் இவ்வாறு நடித்திருந்து நீங்கள் போட்டது போல் ஒருவர் பதிவெழுதி அதை நீங்கள் படிக்க நேர்ந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?//

அட அத்துவல்லாம் பெண்கொலத்த குறிப்பிட்டு சொல்லலீங்கோ. அத்த வெறும் விமர்சனமா மட்டும் பாருங்கோ. நொள்ள கண்ணு கொண்டு பாத்தா இப்பிடித் தான் வெவரம் கெட்ட தனமா கேள்வி வரும்.

//பெண்ணியம் குறித்து உரத்த குரல் எழுப்பும் போது தான் முதலில் அதைக் கடைபிடிக்கிறோமா என ஒருமுறை கேட்டுவிட்டு பிறருக்குச் சொல்லலாம்.//

என்னங்க நீங்க. நாம வெளிய பேசறது எல்லாம் நமக்கில்லீங்க. பெண்ணியங்குற பேருல நாம அப்படி கொரலு கொடுத்தா தானே இது போல அவுத்து போட்டு பெண்ணுக பொறத்த வருவாவ. நம்ம வூட்டு பொண்ணுகளுக்கு சமூகத்துல மரியாத கெடக்கணுமுன்னு நாம நெனக்கறது போல மத்த பொண்ணுகளுக்கும் நாம நெனச்சா பின்ன எப்படி தான் இது போல ஜொள்ளு வுடறதாம். எல்லா பொண்ணுகளும் போத்திகிட்டு வந்தா நம்ம அரிப்ப தீத்துகிடூது எப்படியாம். இதுகூட இன்னும் தெரியாம என்னத்த தான் இதுவர நீங்க "பகுத்து" "அறிஞ்சீங்களோ"? அப்பிடிப்பாத்தா நம்ம பெரியவரு டோண்டு சாரு பெண்ணுங்களுக்கு கொடுத்த ஐடியாக்கள மொதல்ல அவரு வீட்டு பொண்ணுங்களுக்கு சொல்ல சொல்லுவீரு போல தோணுதே? அதெல்லாம் நடக்கிற காரியமா?

//'பிறர் கண்ணில் துரும்பு இருப்பதைப் பார்ர்க்குமுன், உன் கண்ணில் கிடக்கும் உத்திரத்தைக் கவனி' என்கிற ஏசுநாதரின் அறவுரை நினைவுக்கு வருகிறது.. //

ஒங்களுக்கு தானே. அவருக்கு இது நாபகத்துக்கு வர சான்ஸ் இல்லீங்க. இப்பிடி ஒன்ன அவரு பைபிளில படிச்சிருந்தா தானே நாபகத்துக்கு வரும்.

"ஏசுநாதர கர்த்தர் காப்பாத்துனதா" பைபிளுல வருதே அப்பிடீன்னு நா மாங்கு மாங்குன்னு கத்திகிட்டிருக்கேன். இதுவர அத்த அவுரு கண்டுகிட்டது போல காட்டுறாரா பாருங்க?
இனி அப்படியே இத்த அவுரு பைபிளுல படிச்சிருந்தாலும் அத்த அவுரு பின்பற்றணுமின்னு அவசியமொண்ணுமில்லீங்க. அவுரு தான் "மதம் மாறி" ரொம்ப நாளாச்சே.

ம்....
செவிடன் காதுல ஊதிய..........

எரும மாட்டு மேல மழ பெஞ்ச......