Thursday, November 23, 2006

தேவகுமாரன் என்றால் தெய்வத்தின் மகனா?

கேள்வி: 3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும்
இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள்
ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு
தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.

பதில்: இது பற்றி எனக்கு தெரியாது .பைபிளில் எங்கே சொல்லியிருக்குண்ணு சொன்னா
படிச்சிட்டு சொல்லுறேன்.

மேல ஒள்ளது நண்பர் ஜோகிட்ட நா கேட்ட கேள்வியும் அதுக்கு அவரு சொன்ன பதிலும். எனக்கு நண்பர் ஜோகிட்ட பிடிச்ச ஒரு விசியம் இது தான். தனக்கு தெரியாத்தத தெரியாதுன்னு பட்டுன்னு சொல்லூதும் தப்பு தங்கிட்டயே இருந்தாலும் தப்ப தப்புன்னு சொல்லூதும் தான். இது சாதாரணமா மெத்தப்படித்த "பேராசிரியர்கள்ட்ட" இருக்கணும்.

ஆனா நெலம இங்க அப்படியே மாறியிருக்கு. அந்த விசியத்துக்கு கடைசீல வாரேன். மொதல்ல நண்பர் ஜோவுக்கு பதில்.

1. இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.

2. இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.

3. இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். (புதிய ஏற்பாடு. எபிரேயர், அதிகாரம் 7)

மேல காணூது சத்தியமா நா எழுதுன பைபிள்ல ஒள்ளது இல்லீங்க. நா விசியம் தெரிஞ்சிக்கிடதுக்காக படிக்கிற கிறிஸ்த்தவர்கள் பயன்படுத்துற பைபிள்ல ஒள்ளதுங்க.

இந்த வசனத்துல சொல்லப்படற மெல்கிசேதேக்கு அப்படீங்கற ஆளு தாயும் தந்தயும் இல்லாதவன்னும், ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் "தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவன்னும்" பைபிள் தெளிவா சொல்லுது.

ஏசுவ கர்த்தரோட மகன்னு சொல்லி அவரையே கர்த்தரா கொண்டாடுற கிறிஸ்த்தவர்கள் அவருக்கு ஒப்பானவன்னு சொன்ன இந்த மெல்கிசேதேக்க கண்டுக்கவே இல்ல.

ஒரு பெண்(கன்னி) வயிற்றில பிறந்த ஏசுவ விட தாயும் தந்தயும் இல்லாத மெல்கிசேதேக்கு எந்த வகைல கொறச்சல். அதுமட்டுமில்ல. ஒரு பெண் வயித்துல பிறக்கறவன குறிச்சு இதே பைபிளு என்ன சொல்லுது?

ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன், சுத்தமாய் இருப்பது எப்படி? (யோபு 25:4)

அப்படீன்னா பைபிள்படி சுத்தமில்லாத ஏசுவ விட சுத்தமுள்ள மெல்கிசேதேக்கு உயர்ந்தவனில்லையா?

அந்த மெல்கிசேதேக்கப்பத்தி தொடந்து வரூத பாருங்க.

4. இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.

5. லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.

6.ஆகிலும், அவர்களுடைய வம்ச வரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.

7. சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.

8. அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.

இன்னிக்கு உள்ள ஒலக ஜனங்கள்ல பெரிய ஒரு தொகைக்கு(கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள்) தந்தையான ஆபிரகாமுக்கே ஆசீர்வாதம் வழங்கக்கூடிய அளவுக்கு பெரியவன் தான் இந்த மெல்கிசேதேக்கு.

அத மேல கண்ட 7 ஆவது வசனமும் தெளிவா சொல்லுது. ஆபிரகாம விட மெல்கிசேதேக்கு பெரியவன் அப்படீன்னு.
மேல ஒள்ளதிலருந்து மெல்கிசேதேக்குங்குறவரு,

1. ஆபிரகாமுக்கு ஆசி வழங்கும் அளவிற்கு உயர்ந்தவர்.
2. தந்தையும் தாயும் இல்லாதவர்.
3. ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.
4. இன்றுவரை இனியும் உயிரோடிருப்பவர்.

தெய்வமுன்னு சொல்லூதுக்கு ஒள்ள எல்லா தகுதியும் ஒள்ள இவர பைபிள பின்பற்றக்கூடிய கிறிஸ்த்தவர்கள் ஏன் கண்டுக்கிடல?

ஏன்னா இப்படி ஒரு விசியம் பைபிள்ல இருக்கூதே சாமான்ய கிறிஸ்த்தவர்களுக்கு தெரியாது. மெத்த படிச்ச, 45 வருச அனுபமுள்ள, எல்லாத்தயும் படிச்சு முடிச்சுட்டேன்னு தம்பட்டம் அடிச்சிக்கிட்டு மதம் மாறுன தருமி அய்யாவுக்கே பைபிள்ல ஒள்ள ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விசியத்தப்பத்தி அதுவும் அவுரு கிறிஸ்த்தவத்திலருந்து மதம் மாறூதுக்கு காரணமா சொன்னதுல உள்ள ஒரு விசியத்தப்பத்தி தெரியல. பின்ன எப்படி சாமானிய மக்களுக்குத் தெரியும்?

Sunday, November 05, 2006

ஜோவும் மட்டுறுத்தலும் - காப்பாற்றப்படும் நிறமி.

மட்டுறுத்தல தமிழ்மணம் கட்டாயமாக்குனது, பூந்து வெளயாடும் அனானிமஸ்களுக்கு தலவலியானதோ இல்லியோ சில தலவலியான பின்னூட்டங்கள்லருந்து தன்ன காப்பாத்திக்கிட சில "நேர்ம"யாளர்களுக்கு ரொம்பவே ஒதவுது போங்க.

அதுல ஒராளு தான் தமிழ்மணத்துல "மதம் மாறுன" கதயோட பிரபலமான தருமி அய்யா. அவருகிட்ட சில கேள்விகளோட நா போட்ட பின்னூட்டத்த இதுவர அவரு அனுமதிக்கவே இல்ல. பூந்து வெளாடும் அனானிகளுக்கு கூட அந்த நேரத்துல எடம் கொடுத்த அவரு பதிவுக்கு பகுத்தறிவாளன் பின்னூட்டமுன்னா அத்தன அலர்ஜியா என்ன? கர்த்தருக்கே வெளிச்சம்.

அவரு பதிவுல அனுமதிக்காட்டி என்ன. அவரு எங்கல்லாம் பின்னூட்டுகிறாரோ அங்கெல்லாம் போய் அவருகிட்ட கேக்கலாமுன்னு முடிவோட பல எடங்கள்ல அதே கேள்விய அவர்கிட்ட கேட்டிருக்கேன்.

கேள்வி நாயமானதுன்னா நேர்மயானவங்க அத அனுமதிப்பாங்க. என்னோட கேள்வி நாயமானதுன்னு தான் நா நெனச்சிட்டிருந்தேன். ஏன்னா பல பேரு அத அவிங்க பதிவுல அனுமதிச்சிருக்காங்க. ஆனா திடீருன்னு இப்ப எனக்கு என்னோட கேள்வி நாயமானது தானான்னு சந்தேகம் வந்துடுச்சி. ஏன்னா நண்பர் ஜோவுட இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி) பதிவுல என்னோட அந்த கேள்விய கேட்டிருந்தேன். கேட்டு 25 நாளுக்கு மேல ஆயிடிச்சு. இப்ப வர அத அவரு அனுமதிக்கவே இல்லை.

ஒருவேள எங்கேள்வி நாயமில்லாம இருக்கலாமில்லியா. நீங்களே பாருங்க. பாத்து என்னோட கேள்வி நாயமா இல்லையான்னு ஒரு வார்த்த சொல்லீருங்க.

என்னோட பின்னூட்டம்:

// நீங்க யார் யார் என்ன சொன்னார்-ன்னு தெரிந்து கொண்டதால யோசிக்க போயிட்டீங்க .//

நல்லா வார்ரீங்க ஜோ. சரியான காமெடி போங்க.

முழுசா தன்னோட முன்னாள் மதத்தோட வேதப்புத்தகத்தில என்ன இருக்குன்னு கூட தெரிஞ்சுகிடாத்தவரு மற்றத பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டாருன்னு நெனக்கிறீங்களா ?

அவரு மதம் மாற கூறிய காரணங்கள்ல முக்கியமானது "சிலுவைல அறையப்பட்ட இறைமகனால தன்ன காப்பாத்திக்கவோ இல்லேன்னா இறைவனே அவர காப்பாத்த முயற்சிக்காத்தது" தான். "இறைமகன்னு உரிமை கொண்டாடினவர கடைசி சமயத்துல கர்த்தரே கைவிட்டுட்டதால கிறித்தவ மதத்து மேல சந்தேகம் வந்து வெளியேறிட்டாராம்.

இது தப்பு. பைபிள்ல அப்படி இல்ல. ஏசுவோட பிரார்த்தனய கர்த்தர் ஏற்றுக் கொண்டு அவர காப்பாத்தினதா வருதேன்னு அந்த நாள் முதலா இவர்கிட்ட கேள்விகேட்டுட்டு இருக்கேன்.

மொதல்ல அவரு பதிவுல இதக்கேட்டு போட்ட பின்னூட்டத்த இதுவர அவரு அனுமதிக்கவே இல்ல.

அதுக்குப்பிறகு இவரு போவக்கூடிய சில இடங்கள்லயும் இதே கேள்விய வச்சு நா பின்னூட்டம் போட்டாச்சு. இது வர பதில் இல்ல. அதயெல்லாம் இவரு பாத்திருக்க மாட்டாருன்னா நெனக்கிறீங்க ?

அவரு மட்டும் தான் கேள்வி கேப்பாரு மத்தவங்கல்லாம் பதிலு சொல்லீட்டு போவணும். அவரு மட்டும் யாருக்கும் பதிலு சொல்ல மாட்டாருன்னா அதுக்கு என்ன் அர்த்தம்.

அதுனால நா கேட்டுக்கொள்வதெல்லாம் இவருக்கு பதில் கொடுக்கூத மொதல்ல நிறுத்துங்கோ. கேள்வி கேப்பாரு பதில குடுத்தா ஆளக் காணாது. வேற ஏதாவது கேள்வி கேட்டா அந்த தெசேலயே காணாது.

அதுனால இங்கயும் நா அவருக்கிட்ட அதே கேள்விய கேக்கேன்.

பைபிள்ல இயேசுவ சிலுவைல அறையும் போது அவரு கேட்ட பிரார்த்தனய கர்த்தர் கேட்டு அவர காப்பாத்தினதா வருதுன்னு நா சொல்றேன்.

இதக்குறிச்சு என்னோட விவாதிக்க தருமி அய்யா தயாரா ?

இது பதிவுக்கு தொடர்பில்லன்னு நண்பர் ஜோ நெனச்சா தாராளமா அனுமதிக்காம இருக்கலாம்.

அப்புறம் நண்பர் ஜோகிட்டயும் ஒரு கேள்வி:

ஏசு தந்தையில்லாம பிறந்தத ஒரு சிறப்புன்னு சொல்றீங்க. அத வச்சு நீங்க என்ன கூற வரீங்க ? தந்த இல்லாம பிறந்ததாலயும் பைபிள்ல அவர இறைமகன்னு வரனாலயும் அவர இறைமகன்னு நீங்க கூற வரீங்கன்னா ,

1. மொத மனுசன் ஆதாமுக்கு தந்தயும் தாயும் இல்லையே அதனால அவர ஏன் இறை மகன்னு சொல்லல?

2. அவரோட மனைவி ஏவாளுக்கும் தந்தயோ தாயோ இல்லையே அதவச்சு ஏன் அவர இறைமகள்னு சொல்லல?

3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.

4. பைபிள்ல ஏசு இல்லாம இன்னும் பலர இறை மகன்னும் அவர்களின் தந்த கர்த்தருன்னும் வருதே. அப்போ ஏன் அவர்கள்லாம் இறைமகன்களாக கிறித்தவர்களால் கருதப்படல?

அப்புறம் கடைசியா ஒரு கேள்வி கூட ,

5. ஏசு திரும்ப வருவார்னு முஸ்லிம்களும் கிறித்தவர்களும் ஒண்ணு போல நம்புறாங்க. அதுக்கு நெறய முஸ்லிம்கள் இங்க அவங்க நம்பிக்கயயும் வெளக்கமும் கொடுத்துட்டாங்க. ஏசு திரும்ப வரூதப்பத்தியும் திரும்ப அவரு வந்து என்ன செய்வாருன்னும் கிறித்தவர்கள் நம்பறதப் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லலியே ? ஏசு திரும்ப வந்து என்ன செய்வாருன்னு கிறித்தவர்களோட நம்பிக்கயப்பத்தி நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

இதுக்கு நண்பர் ஜோ கொடுத்த பதில்:

பகுத்தறிவாளன்,
உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.


பதிலப்பாத்தா ஏதோ எம்பின்னூட்டத்துல அவருகிட்ட கேட்ட கேள்விய மட்டும் அனுமதிச்சு பாக்கி பாதிய மறச்சது போல தோணும். ஆனா மொத்த பின்னூட்டத்தயுமே மறச்சுட்டு " முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன் " அப்பிடீன்னு ஃபீல் பண்ணியிருக்காரு.

இதுக்கு நா மீண்டும் போட்ட பதில் பின்னூட்டம்:

//பகுத்தறிவாளன் ,
உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.//

என்ன ஜோ என்ன ஆச்சு?

ஏதோ என் பின்னூட்டத்துல கொஞ்சத்த வெளியிட்டு பாக்கிய மறச்சது போல சொல்லியிருக்கீங்க.

என்னா என் பின்னூட்டத்துல ஏதாவது தப்பா கண்டீங்களா ? அப்படீன்னா அதுக்கான வெளக்கத்த கொடுத்திருக்கலாம்ல. ?

நா ஒங்ககிட்ட கேட்டதுக்கு பதில் சொல்றது இருக்கட்டும். நா என்ன கேட்டேன்னு ஒள்ளதயாவது வெளியிடலாம்ல?

இந்த எல்லா "லாம்ல"க்கும் ஒங்ககிட்ட இருந்து நா பதில எதிர்பார்க்கலாமா ?

சத்தியமா இதயும் இன்னும் அவரு அனுமதிக்கவே இல்லைங்க.

இது நாயமாங்க? இல்ல என்னோட கேள்வீலயோ பதில் பின்னூட்டத்துலயோ ஏதாவது தப்பு இருக்கா? ஒண்ணுமே புரியலீங்க.

ஒருவேள இதுதான் "வலைப்பதிவு அரசியலோ"?