Sunday, November 05, 2006

ஜோவும் மட்டுறுத்தலும் - காப்பாற்றப்படும் நிறமி.

மட்டுறுத்தல தமிழ்மணம் கட்டாயமாக்குனது, பூந்து வெளயாடும் அனானிமஸ்களுக்கு தலவலியானதோ இல்லியோ சில தலவலியான பின்னூட்டங்கள்லருந்து தன்ன காப்பாத்திக்கிட சில "நேர்ம"யாளர்களுக்கு ரொம்பவே ஒதவுது போங்க.

அதுல ஒராளு தான் தமிழ்மணத்துல "மதம் மாறுன" கதயோட பிரபலமான தருமி அய்யா. அவருகிட்ட சில கேள்விகளோட நா போட்ட பின்னூட்டத்த இதுவர அவரு அனுமதிக்கவே இல்ல. பூந்து வெளாடும் அனானிகளுக்கு கூட அந்த நேரத்துல எடம் கொடுத்த அவரு பதிவுக்கு பகுத்தறிவாளன் பின்னூட்டமுன்னா அத்தன அலர்ஜியா என்ன? கர்த்தருக்கே வெளிச்சம்.

அவரு பதிவுல அனுமதிக்காட்டி என்ன. அவரு எங்கல்லாம் பின்னூட்டுகிறாரோ அங்கெல்லாம் போய் அவருகிட்ட கேக்கலாமுன்னு முடிவோட பல எடங்கள்ல அதே கேள்விய அவர்கிட்ட கேட்டிருக்கேன்.

கேள்வி நாயமானதுன்னா நேர்மயானவங்க அத அனுமதிப்பாங்க. என்னோட கேள்வி நாயமானதுன்னு தான் நா நெனச்சிட்டிருந்தேன். ஏன்னா பல பேரு அத அவிங்க பதிவுல அனுமதிச்சிருக்காங்க. ஆனா திடீருன்னு இப்ப எனக்கு என்னோட கேள்வி நாயமானது தானான்னு சந்தேகம் வந்துடுச்சி. ஏன்னா நண்பர் ஜோவுட இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி) பதிவுல என்னோட அந்த கேள்விய கேட்டிருந்தேன். கேட்டு 25 நாளுக்கு மேல ஆயிடிச்சு. இப்ப வர அத அவரு அனுமதிக்கவே இல்லை.

ஒருவேள எங்கேள்வி நாயமில்லாம இருக்கலாமில்லியா. நீங்களே பாருங்க. பாத்து என்னோட கேள்வி நாயமா இல்லையான்னு ஒரு வார்த்த சொல்லீருங்க.

என்னோட பின்னூட்டம்:

// நீங்க யார் யார் என்ன சொன்னார்-ன்னு தெரிந்து கொண்டதால யோசிக்க போயிட்டீங்க .//

நல்லா வார்ரீங்க ஜோ. சரியான காமெடி போங்க.

முழுசா தன்னோட முன்னாள் மதத்தோட வேதப்புத்தகத்தில என்ன இருக்குன்னு கூட தெரிஞ்சுகிடாத்தவரு மற்றத பத்தி முழுசா தெரிஞ்சிகிட்டாருன்னு நெனக்கிறீங்களா ?

அவரு மதம் மாற கூறிய காரணங்கள்ல முக்கியமானது "சிலுவைல அறையப்பட்ட இறைமகனால தன்ன காப்பாத்திக்கவோ இல்லேன்னா இறைவனே அவர காப்பாத்த முயற்சிக்காத்தது" தான். "இறைமகன்னு உரிமை கொண்டாடினவர கடைசி சமயத்துல கர்த்தரே கைவிட்டுட்டதால கிறித்தவ மதத்து மேல சந்தேகம் வந்து வெளியேறிட்டாராம்.

இது தப்பு. பைபிள்ல அப்படி இல்ல. ஏசுவோட பிரார்த்தனய கர்த்தர் ஏற்றுக் கொண்டு அவர காப்பாத்தினதா வருதேன்னு அந்த நாள் முதலா இவர்கிட்ட கேள்விகேட்டுட்டு இருக்கேன்.

மொதல்ல அவரு பதிவுல இதக்கேட்டு போட்ட பின்னூட்டத்த இதுவர அவரு அனுமதிக்கவே இல்ல.

அதுக்குப்பிறகு இவரு போவக்கூடிய சில இடங்கள்லயும் இதே கேள்விய வச்சு நா பின்னூட்டம் போட்டாச்சு. இது வர பதில் இல்ல. அதயெல்லாம் இவரு பாத்திருக்க மாட்டாருன்னா நெனக்கிறீங்க ?

அவரு மட்டும் தான் கேள்வி கேப்பாரு மத்தவங்கல்லாம் பதிலு சொல்லீட்டு போவணும். அவரு மட்டும் யாருக்கும் பதிலு சொல்ல மாட்டாருன்னா அதுக்கு என்ன் அர்த்தம்.

அதுனால நா கேட்டுக்கொள்வதெல்லாம் இவருக்கு பதில் கொடுக்கூத மொதல்ல நிறுத்துங்கோ. கேள்வி கேப்பாரு பதில குடுத்தா ஆளக் காணாது. வேற ஏதாவது கேள்வி கேட்டா அந்த தெசேலயே காணாது.

அதுனால இங்கயும் நா அவருக்கிட்ட அதே கேள்விய கேக்கேன்.

பைபிள்ல இயேசுவ சிலுவைல அறையும் போது அவரு கேட்ட பிரார்த்தனய கர்த்தர் கேட்டு அவர காப்பாத்தினதா வருதுன்னு நா சொல்றேன்.

இதக்குறிச்சு என்னோட விவாதிக்க தருமி அய்யா தயாரா ?

இது பதிவுக்கு தொடர்பில்லன்னு நண்பர் ஜோ நெனச்சா தாராளமா அனுமதிக்காம இருக்கலாம்.

அப்புறம் நண்பர் ஜோகிட்டயும் ஒரு கேள்வி:

ஏசு தந்தையில்லாம பிறந்தத ஒரு சிறப்புன்னு சொல்றீங்க. அத வச்சு நீங்க என்ன கூற வரீங்க ? தந்த இல்லாம பிறந்ததாலயும் பைபிள்ல அவர இறைமகன்னு வரனாலயும் அவர இறைமகன்னு நீங்க கூற வரீங்கன்னா ,

1. மொத மனுசன் ஆதாமுக்கு தந்தயும் தாயும் இல்லையே அதனால அவர ஏன் இறை மகன்னு சொல்லல?

2. அவரோட மனைவி ஏவாளுக்கும் தந்தயோ தாயோ இல்லையே அதவச்சு ஏன் அவர இறைமகள்னு சொல்லல?

3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.

4. பைபிள்ல ஏசு இல்லாம இன்னும் பலர இறை மகன்னும் அவர்களின் தந்த கர்த்தருன்னும் வருதே. அப்போ ஏன் அவர்கள்லாம் இறைமகன்களாக கிறித்தவர்களால் கருதப்படல?

அப்புறம் கடைசியா ஒரு கேள்வி கூட ,

5. ஏசு திரும்ப வருவார்னு முஸ்லிம்களும் கிறித்தவர்களும் ஒண்ணு போல நம்புறாங்க. அதுக்கு நெறய முஸ்லிம்கள் இங்க அவங்க நம்பிக்கயயும் வெளக்கமும் கொடுத்துட்டாங்க. ஏசு திரும்ப வரூதப்பத்தியும் திரும்ப அவரு வந்து என்ன செய்வாருன்னும் கிறித்தவர்கள் நம்பறதப் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லலியே ? ஏசு திரும்ப வந்து என்ன செய்வாருன்னு கிறித்தவர்களோட நம்பிக்கயப்பத்தி நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

இதுக்கு நண்பர் ஜோ கொடுத்த பதில்:

பகுத்தறிவாளன்,
உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.


பதிலப்பாத்தா ஏதோ எம்பின்னூட்டத்துல அவருகிட்ட கேட்ட கேள்விய மட்டும் அனுமதிச்சு பாக்கி பாதிய மறச்சது போல தோணும். ஆனா மொத்த பின்னூட்டத்தயுமே மறச்சுட்டு " முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன் " அப்பிடீன்னு ஃபீல் பண்ணியிருக்காரு.

இதுக்கு நா மீண்டும் போட்ட பதில் பின்னூட்டம்:

//பகுத்தறிவாளன் ,
உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.//

என்ன ஜோ என்ன ஆச்சு?

ஏதோ என் பின்னூட்டத்துல கொஞ்சத்த வெளியிட்டு பாக்கிய மறச்சது போல சொல்லியிருக்கீங்க.

என்னா என் பின்னூட்டத்துல ஏதாவது தப்பா கண்டீங்களா ? அப்படீன்னா அதுக்கான வெளக்கத்த கொடுத்திருக்கலாம்ல. ?

நா ஒங்ககிட்ட கேட்டதுக்கு பதில் சொல்றது இருக்கட்டும். நா என்ன கேட்டேன்னு ஒள்ளதயாவது வெளியிடலாம்ல?

இந்த எல்லா "லாம்ல"க்கும் ஒங்ககிட்ட இருந்து நா பதில எதிர்பார்க்கலாமா ?

சத்தியமா இதயும் இன்னும் அவரு அனுமதிக்கவே இல்லைங்க.

இது நாயமாங்க? இல்ல என்னோட கேள்வீலயோ பதில் பின்னூட்டத்துலயோ ஏதாவது தப்பு இருக்கா? ஒண்ணுமே புரியலீங்க.

ஒருவேள இதுதான் "வலைப்பதிவு அரசியலோ"?

31 comments:

said...

//ஒருவேள இதுதான் "வலைப்பதிவு அரசியலோ"?//

அப்டித்தாங்க தெரியுது!

said...

//நீங்களே பாருங்க. பாத்து என்னோட கேள்வி நாயமா இல்லையான்னு ஒரு வார்த்த சொல்லீருங்க..//

அம்புட்டும் நாயமான கேள்விதான். இதுக்கு அவிங்க ஏன் பதில் சொல்ல மாட்டேன்ங்குறாங்க?

said...

//இது நாயமாங்க? இல்ல என்னோட கேள்வீலயோ பதில் பின்னூட்டத்துலயோ ஏதாவது தப்பு இருக்கா? ஒண்ணுமே புரியலீங்க.//

கொஞ்சமும் நாயமில்லே!!!

கேடடதிலயும் தப்பே இல்லீங்க!!!!!

said...

பகுத்தறிவாளன் என்று பெயர்வைத்துக் கொண்டிருப்பவரே..!

தருமி மற்றும் ஜோ போன்றோரையும் பகுத்தறிந்து கொண்டீரா இப்போது?.

கேள்விகளை அவர்கள் கேட்பார்கள்.

மீண்டும் அவர்களைக் கேட்டால் அவற்றை அனுமதிக்க மாட்டார்கள்.

ஏனெனில் "பதில் இல்லை"

நீங்களும் விடாது துரத்துகின்றீர்கள்.

எவ்வளவு தூரம் ஓடுவார்கள் என்று பார்ப்போம்.

மதமறு

பகுத்தறி

மூடநம்பிக்கை ஒழி

இதுவே 'வணங்காமுடி'யின் முழக்கம்

Anonymous said...

Have you proved what Vasanthan asked in your previous post?
Where have you gove for 5 months?

Anonymous said...

சரியாதனப்பு கேட்டுருக்கீக....பின்ன ஏன் பதிலகாணோம்....ஒருவேளை அவுகளுக்கு பதில் தெரியலையோ என்னமோ.

said...

பகுத்தறிவாளன்,
உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காதற்கு வேலைப் பளுவும் அதனால் நான் மறந்து போனதுமே காரணம் .நாளை உங்களுக்கு பதிலளிக்கிறேன் .ஆனால் பெரிதாக என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் .நான் மறை அறிஞனும் அல்ல .கிறிஸ்தவ மதத்தை தற்காத்து நிறுவ அம்மதத்தின் தீவிர பற்றாளனுமல்ல .கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு எனக்கு மத நம்பிக்கை கிடையாது என்று முன்பே சொல்லியிருக்கேன்.

said...

உங்கள் கேள்விகளில் தவறானதாகவோ வெளியிடக்கூடாததாகவோ எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எந்த ஜனநாயக சூழலிலும் அனுமதிக்க படவேண்டியவை, வெளியிடாதது ஒரு ஜனநாயக மறுப்பாகாவே எனக்கு தெரிகிறது. உங்கள் கருத்துக்களை மறுக்கலாம், புறக்கணிக்கலாம், அது வேறு விஷயம்.

said...

//உங்கள் கேள்விகளில் தவறானதாகவோ வெளியிடக்கூடாததாகவோ எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எந்த ஜனநாயக சூழலிலும் அனுமதிக்க படவேண்டியவை, வெளியிடாதது ஒரு ஜனநாயக மறுப்பாகாவே எனக்கு தெரிகிறது. உங்கள் கருத்துக்களை மறுக்கலாம், புறக்கணிக்கலாம், அது வேறு விஷயம்.//

ரோசா வசந்த்,
மன்னிக்கவும் .என்னுடைய அந்த பதிவானது இஸ்லாமிய சகோதரர்களிடம் சில விளக்கங்கள் கேட்பதற்காக ஒரு விவாதமாக இருந்தது .அந்த விவாதத்தை திசை திருப்பும் பின்னூட்டங்களை தற்போது அனுமதிக்க வேண்டாம் என பலரிடமிருந்து வேண்டுகோள் வந்ததால் அப்போது அதை நிறுத்தி வைத்து ,என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பின்னர் பதிலளிப்பதாக குறிப்பிட்டேன் .பின்னர் அதை மறந்து விட்டதற்கு காரணம் இங்கே சொல்லியிருக்கிறேன் ..கிறிஸ்தவ மதத்துக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..நன்றி.

said...

//கிறிஸ்தவ மதத்துக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை//

அப்படி எனில் கிறிஸ்தவத்தை எதிர்க்கும் தருமியின் முகமூடியை பாதுகாக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறதா?

said...

ஐயா! பகுத்தறிவாளன் .சரிங்க ..இப்பவே பதில் சொல்லிடுறேன்.

//1. மொத மனுசன் ஆதாமுக்கு தந்தயும் தாயும் இல்லையே அதனால அவர ஏன் இறை மகன்னு சொல்லல?//
தந்தை தாயாக இருப்பதற்கு அங்கு மனித குலமே இருக்கவில்லை .இயேசுவைப்போல ஆதாம் கர்ப்பத்திலிருந்து பிறக்கவில்லை.

//2. அவரோட மனைவி ஏவாளுக்கும் தந்தயோ தாயோ இல்லையே அதவச்சு ஏன் அவர இறைமகள்னு சொல்லல?//

முதல் கேள்விக்கான பதிலே இங்கேயும்

//3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.//

இது பற்றி எனக்கு தெரியாது .பைபிளில் எங்கே சொல்லியிருக்குண்ணு சொன்னா படிச்சிட்டு சொல்லுறேன்


//4. பைபிள்ல ஏசு இல்லாம இன்னும் பலர இறை மகன்னும் அவர்களின் தந்த கர்த்தருன்னும் வருதே. அப்போ ஏன் அவர்கள்லாம் இறைமகன்களாக கிறித்தவர்களால் கருதப்படல?//

அவர்களெல்லாம் கன்னியிடமிருந்து பிறக்கவில்லை என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் .அது போக கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவை தேவ மைந்தனாக ஏற்றுக்கொண்டவர் கூட்டம் .நீங்கள் வேறொருவரை அவ்வாறு நினைத்தால் நீங்களும் உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்வது தானே ? ஏன் கிறிஸ்தவர்களை செய்ய சொல்லுகிறீர்கள்?


//5. ஏசு திரும்ப வருவார்னு முஸ்லிம்களும் கிறித்தவர்களும் ஒண்ணு போல நம்புறாங்க. அதுக்கு நெறய முஸ்லிம்கள் இங்க அவங்க நம்பிக்கயயும் வெளக்கமும் கொடுத்துட்டாங்க. ஏசு திரும்ப வரூதப்பத்தியும் திரும்ப அவரு வந்து என்ன செய்வாருன்னும் கிறித்தவர்கள் நம்பறதப் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லலியே ? ஏசு திரும்ப வந்து என்ன செய்வாருன்னு கிறித்தவர்களோட நம்பிக்கயப்பத்தி நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்.//

கிறிஸ்தவர்களின் நம்பிக்கை படி தேவ மைந்தன் இயேசு சிலுவையில் அறையுண்டு ,கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து ,முழு உடலோடு வானகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தந்தையோடு ,இன்னும் உயிரோடு இருக்கிறார் .உலகின் இறுதி நாளில் ,இறுதித் தீர்ப்பு நாளில் ,வானகத்திலிருந்து இறங்கி அவர் மீண்டும் பூமிக்கு வருவார் .அதை எல்லோரும் காண்பார்கள்.இதுவே கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

போதுமா ஐயா!

said...

ஐயா! பகுத்தறிவாளன் .சரிங்க ..இப்பவே பதில் சொல்லிடுறேன்.

//1. மொத மனுசன் ஆதாமுக்கு தந்தயும் தாயும் இல்லையே அதனால அவர ஏன் இறை மகன்னு சொல்லல?//
தந்தை தாயாக இருப்பதற்கு அங்கு மனித குலமே இருக்கவில்லை .இயேசுவைப்போல ஆதாம் கர்ப்பத்திலிருந்து பிறக்கவில்லை.

//2. அவரோட மனைவி ஏவாளுக்கும் தந்தயோ தாயோ இல்லையே அதவச்சு ஏன் அவர இறைமகள்னு சொல்லல?//

முதல் கேள்விக்கான பதிலே இங்கேயும்

//3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.//

இது பற்றி எனக்கு தெரியாது .பைபிளில் எங்கே சொல்லியிருக்குண்ணு சொன்னா படிச்சிட்டு சொல்லுறேன்


//4. பைபிள்ல ஏசு இல்லாம இன்னும் பலர இறை மகன்னும் அவர்களின் தந்த கர்த்தருன்னும் வருதே. அப்போ ஏன் அவர்கள்லாம் இறைமகன்களாக கிறித்தவர்களால் கருதப்படல?//

அவர்களெல்லாம் கன்னியிடமிருந்து பிறக்கவில்லை என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் .அது போக கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவை தேவ மைந்தனாக ஏற்றுக்கொண்டவர் கூட்டம் .நீங்கள் வேறொருவரை அவ்வாறு நினைத்தால் நீங்களும் உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்வது தானே ? ஏன் கிறிஸ்தவர்களை செய்ய சொல்லுகிறீர்கள்?


//5. ஏசு திரும்ப வருவார்னு முஸ்லிம்களும் கிறித்தவர்களும் ஒண்ணு போல நம்புறாங்க. அதுக்கு நெறய முஸ்லிம்கள் இங்க அவங்க நம்பிக்கயயும் வெளக்கமும் கொடுத்துட்டாங்க. ஏசு திரும்ப வரூதப்பத்தியும் திரும்ப அவரு வந்து என்ன செய்வாருன்னும் கிறித்தவர்கள் நம்பறதப் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லலியே ? ஏசு திரும்ப வந்து என்ன செய்வாருன்னு கிறித்தவர்களோட நம்பிக்கயப்பத்தி நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்.//

கிறிஸ்தவர்களின் நம்பிக்கை படி தேவ மைந்தன் இயேசு சிலுவையில் அறையுண்டு ,கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து ,முழு உடலோடு வானகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தந்தையோடு ,இன்னும் உயிரோடு இருக்கிறார் .உலகின் இறுதி நாளில் ,இறுதித் தீர்ப்பு நாளில் ,வானகத்திலிருந்து இறங்கி அவர் மீண்டும் பூமிக்கு வருவார் .அதை எல்லோரும் காண்பார்கள்.இதுவே கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

said...

////கிறிஸ்தவ மதத்துக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை//

அப்படி எனில் கிறிஸ்தவத்தை எதிர்க்கும் தருமியின் முகமூடியை பாதுகாக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறதா? //

கிறிஸ்தவ எதிரியான தருமியை நான் ஏன் பாதுகாக்க வேண்டும் ?

தருமியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை அவரிடமே ,அவரின் பதிவிலேயே கேட்டிருக்க வேண்டும் .அவர் பதில் சொல்லாததற்கு நான் பொருப்பில்லை .என்னுடைய பதிவில் நடந்த விவாதத்தை அது திசை திருப்ப வாய்ப்பிருந்ததால் அதனை அனுமதிக்கவில்லை.அவ்வளவு தான்.

said...

ஜோ, மன்னிக்கவும். சம்பந்தப் பட்ட உங்கள் பதிவை பார்த்தேன். நல்ல விவாதமாக இருந்தது. இப்போது பகுத்தறிவாளனின் பதிவை பார்த்த போது அவர் எழுதியதை நீங்கள் வெளியிடாததற்கான நியாயமான காரணம் எதுவும் எனக்கு தோன்றாததால் எழுதினேன். 'திசை த்ருப்புவதாக' நீங்கள் கருதுவது, குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பேசுவது பற்றி என்ன கருத்து சொல்வது என்றுசரியாக தெரியவில்லை. திசை திருப்புவதாக நினைத்தால், கருத்தை வெளியிட்டுவிட்டு, அது குறித்து பேசாமல் புறக்கணிக்கலாம் என்பது என் கருத்து. மற்றபடி உங்களை கிரிஸ்தவத்திற்கு விமரசனமில்லாமல் வக்காலத்து வாங்குவதாக நான் நினைக்கவில்லை. (டாவின்சி கோட் தடையை நீங்கள் எதிர்த்து எழுதியது நினைவிருக்கிரது).

said...

ரோசாவசந்த்,
ஒரு கோணத்தில் நான் செய்தது தவறு தான் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன் .ஆனால் அதற்கான காரனம் நிச்சயமாக ஜனநாயக எதிர்ப்போ அல்லது ஒளிந்து ஓடுவதோ அல்ல .மதங்கள் குறித்த பெரும்பாலான பதிவிகளில் இங்கு எப்படி விவாதங்கள் திசை மாறி சண்டையில் போய் முடிந்து பதிவின் நோக்கத்தையே சிதைப்பது தான் வழக்கம் .ஆனால் இதற்கு முன் இந்து மதம் குறித்த சந்தேகங்கள் என்ற என் பதிவில் வழக்கத்திற்கு மாறாக அருமையான கருத்து பரிமாற்றத்தை இந்து நண்பர்கள் வழங்கினார்கள் . அங்கும் விவாதத்தின் ஓட்டத்தை மாற்றும் பின்னூட்டங்களை நான் அனுமதிக்கவில்லை .அவ்வாறு செய்திருந்தால் இவ்வளவு நீண்ட அருமையான விவாதம் நடைபெற்றிருக்காது .அதுவே இங்கும் நடந்தது .

உங்கள் கருத்துக்கு நன்றி .இனிமேல் இதனை கவனத்தில் கொள்ளுவேன்.

said...

ரோசாவசந்த்,
ஒரு கோணத்தில் நான் செய்தது தவறு தான் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன் .ஆனால் அதற்கான காரனம் நிச்சயமாக ஜனநாயக எதிர்ப்போ அல்லது ஒளிந்து ஓடுவதோ அல்ல .மதங்கள் குறித்த பெரும்பாலான பதிவிகளில் இங்கு எப்படி விவாதங்கள் திசை மாறி சண்டையில் போய் முடிந்து பதிவின் நோக்கத்தையே சிதைப்பது தான் வழக்கம் .ஆனால் இதற்கு முன் இந்து மதம் குறித்த சந்தேகங்கள் என்ற என் பதிவில் வழக்கத்திற்கு மாறாக அருமையான கருத்து பரிமாற்றத்தை இந்து நண்பர்கள் வழங்கினார்கள் . அங்கும் விவாதத்தின் ஓட்டத்தை மாற்றும் பின்னூட்டங்களை நான் அனுமதிக்கவில்லை .அவ்வாறு செய்திருந்தால் இவ்வளவு நீண்ட அருமையான விவாதம் நடைபெற்றிருக்காது .அதுவே இங்கும் நடந்தது .

உங்கள் கருத்துக்கு நன்றி .இனிமேல் இதனை கவனத்தில் கொள்ளுவேன்.

said...

மொதல்ல எம்பின்னூட்டங்கள் நாயமானது தான்னு சொல்லி எனக்கு அமோக ஆதரவு தந்த நண்பர்கள் அழகு, அப்பாவி, செங்கோடன், வணங்காமுடி, ரோசாவசந்த், அனானி போன்றவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அப்பாடா இப்பதான் எம்மனம் நிம்மதியாச்சு. ஏதோ செய்யக்கூடாத்த தப்ப செய்திட்டனோ அதனால தான் நண்பர் ஜோ எம்பின்னூட்டத்த அனுமதிக்கல்லயோன்னு நெனச்சு மனசு நொந்து போய் இருந்துட்டிருந்தேன். எங்கேள்விக சரிதான்னு நண்பர்கள் சொன்னதுல ரொம்ப சந்தோசம்.

நண்பர் வசந்தன்கிட்ட அவரு கேட்டத புரூவ் செய்திட்டியான்னு வேறொரு அனானி நண்பர் கேட்டிருக்காரு. அப்புறம் 5 மாசம் எங்க போனன்னு ஒரு கேள்வியும்.

ரண்டாவது கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுண்ணா. அது என்னோட பெர்சனல் விசியம். நா எங்க போறன் எங்க வாறன்னு ஒவ்வொருத்தருக்கும் கணக்கு குடுத்துட்டு தான் போவணும் வரணுமின்னா எப்படிண்ணா?

பின்ன நண்பர் வசந்தனுக்கு பதிலு குடுக்காததுக்கு காரணம் அவரு என்னோட விவாதிக்க ஒண்ணும் தயாரா இல்ல. முடிஞ்சா அந்த ஆதாரத்த ஒரு வரீல குடுத்துட்டு போன்னு சொன்னதுனால தான்.

பைபிள்ல வர செல விசியங்களப் பத்தி நா கேக்குறேன். அதுல அப்பிடியெல்லாம் இருக்குன்னு சொல்றன். கிறிஸ்த்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரா பைபிள்லயே இருக்குன்னு சொல்றன்.

அப்ப அதப்பத்தி கேக்க வரக்கூடிய கிறிஸ்த்தவங்க என்ன செய்யணும். அட்லீஸ்ட் அதப்பத்தி பேசவாவது தயாராவணுமில்லியா? ஆதாரத்த குடு. ஆனா பேச தயாரா இல்லன்னு சொன்னா எப்படி?

பேச தயாரா இல்லன்னா போய்ட்டே இரிங்க. விவாதிக்க தயாரானவங்க வாங்க. நா விவாதிக்க எப்பவுமே தயாரா இருக்கேன்.

முடிஞ்சா பைபிள்ல நா சொல்லூத போல ஒண்ணுமே இல்ல. நிரூபி பாப்போம். நீ சொல்லூத ஏத்துக்கிறோம். அப்பிடீன்னு சொல்லி என்னோட விவாதிக்க வாங்களேன் பாப்போம்.

இங்க ஒரு விசியம் அல்லாரும் கவனிக்கணும்.

நா விவாதிக்க கூப்பிடூது கிறிஸ்தவத்த எதுத்து வெளியேறின 57 வருச அனுபவஸ்தர் தருமிய தான்.

அவரு கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற கூறிய காரணம் தப்பு அப்பிடீன்னு தான் நா கூப்பிடுறேன்.

அவரு தயாரா? இங்க அதான் கேள்வி.

அது இல்லாம வேற யாராவது எங்கிட்ட கேள்வி கேக்க வந்தா, நா ரெடி தான். ஆனா கேள்விய கேட்டுட்டு ஜகா வாங்கக்கூடாது.

நின்னு விவாதிக்கணும். ரெடியா?

பகுத்தறிவாளன்

said...

பகுத்தறிவாளன்,
உங்க இன்னொரு சந்தேகத்துக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

//பகுத்தறிவாளன்,
உங்கள் பின்னூட்டத்தை முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பின்னர் பதிலளிக்க முயல்கிறேன்.

பதிலப்பாத்தா ஏதோ எம்பின்னூட்டத்துல அவருகிட்ட கேட்ட கேள்விய மட்டும் அனுமதிச்சு பாக்கி பாதிய மறச்சது போல தோணும். ஆனா மொத்த பின்னூட்டத்தயுமே மறச்சுட்டு " முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன் " அப்பிடீன்னு ஃபீல் பண்ணியிருக்காரு.
//
"முழுவதும் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்" என்று நான் சொன்னதில் உள்ள பொருள் பிழையை இப்போது உணருகிறேன் .பாதியை வெளியிடுகிறேன் என்பது நான் சொல்ல வந்ததல்ல .'முழுவதையுமே வெளியிட முடியாமைக்கு' என்று சொல்லியிருக்க வேண்டும் .பொருள் குற்றத்துக்கு மன்னிக்க.

ஐயா நாகர் கோவில்ல தான் இருக்கீங்களா?.நானும் அடுத்த மாதம் அங்கே (நமக்கும் நாகர்கோவில் தான்) அங்கே வருகிறேன்.

விவரம் புரியாதவன் said...

//கிறிஸ்தவர்களின் நம்பிக்கை படி தேவ மைந்தன் இயேசு சிலுவையில் அறையுண்டு ,கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து ,முழு உடலோடு வானகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தந்தையோடு ,இன்னும் உயிரோடு இருக்கிறார் //


யாருடைய தந்தையோடு..?

said...

எபா.. பகுத்தறிவாளா!

இறைமகன் பட்டியல் இன்னும் நீளமா இருக்குதுப்பா!!!

நான் அவனுக்கு (சாமுவேலுக்கு) பிதாவாய் இருப்பேன். அவன் எனக்கு குமாரனாய் இருப்பான். (இரண்டாம் சாமுவேல் 7:14)

நான் அவனுக்கு (தாவீதுக்கு) பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான். (முதலாம் நாளாகமம் 17:13)

அவன் (சாலமோன்) எனக்குக் குமாரனாய் இருப்பான். நான் அவனுக்குப் பிதவாய் இருப்பேன். (முதலாம் நாளாகமம் 22:10)

இஸ்ரவேலுக்கு நான் பிதலாக இருக்கிறேன். எப்ராயீம் என் சிரேஷ்ட புத்திரனாய் இருக்கிறான். (எரேமியா 31:9)

இதுபோக நாம எல்லாரும் கர்த்தருடைய பிள்ளைகள்

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள். (உபாகமம் 14:1)

மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார். (மத்தேயு 6:14,15)

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள். (மத்தேயு 5:45)

பரலோகத்திலிருக்கிற உங்கள் பரமபிதா தம்மிடத்தில் வேண்டிக் கொண்டவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 7:11)

புமியில் இருக்கிற ஒருவரையும் உங்கள் பிதா என்று சொல்லாதீர்கள். பரலோகத்திருக்கிற ஒருவரே உங்களுக்கு பிதாவாக இருக்கிறார். (மத்தேயு 23:9)

ஏசு மட்டுமில்லீங்க! பைபிள் சொல்லுது நாமளும் தேவனின் பிள்ளைங்கதாங்க!

said...

நண்பர் செங்கோடனுக்கு நன்றிகள்.

ஒருக்கா நான் நண்பர் ஜோகிட்ட கேட்ட 4 ஆவது கேள்விய படிங்க.

//4. பைபிள்ல ஏசு இல்லாம இன்னும் பலர இறை மகன்னும் அவர்களின் தந்த கர்த்தருன்னும் வருதே. அப்போ ஏன் அவர்கள்லாம் இறைமகன்களாக கிறித்தவர்களால் கருதப்படல?//

இதுக்கு நண்பர் ஜோ அவர்கள் தந்த பதில்:

//அவர்களெல்லாம் கன்னியிடமிருந்து பிறக்கவில்லை என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் .அது போக கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவை தேவ மைந்தனாக ஏற்றுக்கொண்டவர் கூட்டம் .நீங்கள் வேறொருவரை அவ்வாறு நினைத்தால் நீங்களும் உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்வது தானே ? ஏன் கிறிஸ்தவர்களை செய்ய சொல்லுகிறீர்கள்?//

இந்த பதிலுக்கு உங்ககிட்ட ஏதாவது கூற/கேட்க இருக்கா?

என் கேள்விகளுக்கு மழுப்பியோ/மழுப்பாமலோ, நச்சென்றோ/நச்சில்லாமலோ, அறிவுக்கு பொருந்தியோ/பொருந்தாமலோ, தமாஸாட்டோ/சீரியஸாட்டோ கொஞ்சம் பிந்தினாலும் ஒடனடியா பதில் தந்த நண்பர் ஜோவுக்கு நன்றி.

//நான் மறை அறிஞனும் அல்ல .கிறிஸ்தவ மதத்தை தற்காத்து நிறுவ அம்மதத்தின் தீவிர பற்றாளனுமல்ல.//

மறை அறிஞன் இல்லாட்டாலும் கிறிஸ்த்தவ முக்கிய அடிப்பட விசியம் குறிச்சு பதிலளிச்சிருப்பதால அதுக்கு என்னோட பதிலு பெறவு வைக்கேன்.

//கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு எனக்கு மத நம்பிக்கை கிடையாது என்று முன்பே சொல்லியிருக்கேன்.//

இங்க மதத்தப்பத்தி நா கேள்வி கேட்டதா எனக்குத் தெரியல. கிறிஸ்த்தவ கடவுள் நம்பிக்கய குறிச்சு தான் கேள்வி கேட்டதா நெனக்கேன்.

சரி கடவுளப்பத்தி நேரடியாவே கேட்டுரறேன்.

தன்ன கிறிஸ்த்தவரா அடயாளம் காட்டிக்கிற நண்பர் ஜோ கடவுளப்பத்தி என்ன வரயற வச்சிருக்கார்?

நண்பர் ஜோவின் பதில்களுக்கான என் பதில் பெறவு.

பகுத்தறிவாளன்.

ஏமாற்றாதவன் said...

Dare to be different அப்டின்னு முழங்குற பேராசிரியர் கிருமி எங்கே போயிட்டார்? அவரை நோக்கி இங்கே எவ்வளவோ விவாதம் அவரக் குறிச்சித் தானே போயிக்கிட்டு இருக்கு?

said...

///அவர்களெல்லாம் கன்னியிடமிருந்து பிறக்கவில்லை என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் .அது போக கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவை தேவ மைந்தனாக ஏற்றுக்கொண்டவர் கூட்டம் .நீங்கள் வேறொருவரை அவ்வாறு நினைத்தால் நீங்களும் உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்வது தானே ? ஏன் கிறிஸ்தவர்களை செய்ய சொல்லுகிறீர்கள்?///

//இந்த பதிலுக்கு உங்ககிட்ட ஏதாவது கூற/கேட்க இருக்கா?//

என்ன இப்படி கேட்டுட்டியே?
கேக்குறதுக்கு நெறய இருக்கு அப்பு. இங்க கர்த்தரின் சொல்லதேன் முக்கியம்.

''அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என்னுடைய நேச குமாரன். இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன். என்று உரைத்தது. (மத்தேயு 3:17)

ஏசுவை பத்தி இப்படி சொன்னதா பைபிள் சொல்லுதுங்க. ஆனா இதவிட டபுள் ஸ்டாங்க தாவீதை பத்தியும் கர்த்தர் சொன்னதா பைபிள் சொல்லுதுங்க

''நீர் என் குமாரன். இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்'' (சங்கீதம் 2:7)

இதுக்கு என்னான்றாரு நம்ம ஜோ அண்ணாத்தே?

said...

\\கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு எனக்கு மத நம்பிக்கை கிடையாது என்று முன்பே சொல்லியிருக்கேன்.\\

அப்போ ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?.

கடவுளே இல்லைன்னு சொல்ற ஆளுங்களையே இவர் கடவுள் இல்லைனு சொல்ற மதத்துக்காரர் என்று படித்தறிந்த மக்கள் சொல்கிறார்களே.

மதத்து மேல் நம்பிக்கை இல்லை என்றால் அதன் உட்பிரிவான கத்தோலிக்க சித்தாந்த்தை ஆதரிப்பது ஏன்?.

said...

//''நீர் என் குமாரன். இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்'' (சங்கீதம் 2:7)

இதுக்கு என்னான்றாரு நம்ம ஜோ அண்ணாத்தே?//

நான் சொன்ன காரணத்துக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம் அண்ணாத்தே! கொஞ்சம் கண்ணத்திறந்து பாருங்க.

said...

//\\கடவுள் நம்பிக்கை இருக்கிற அளவுக்கு எனக்கு மத நம்பிக்கை கிடையாது என்று முன்பே சொல்லியிருக்கேன்.\\

அப்போ ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?.//
நமக்கு மெலே நம்மைப் படைத்த சக்தி உண்டு என்ற நம்பிக்கைக்கும் ,ஒரு மதம் என்ற ஸ்தாபனத்தின் கோட்பாடு சடங்குகளில் உள்ள நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாத பிரகஸ்பதிகளிடம் நான் என்ன சொன்னால் புரிய வைக்க முடியும்?

//கடவுளே இல்லைன்னு சொல்ற ஆளுங்களையே இவர் கடவுள் இல்லைனு சொல்ற மதத்துக்காரர் என்று படித்தறிந்த மக்கள் சொல்கிறார்களே.//
அந்த மதத்துலயும் எனக்கு நம்பிக்கை இல்லை .போய் அவங்க கிட்டயே கேளும்.

//மதத்து மேல் நம்பிக்கை இல்லை என்றால் அதன் உட்பிரிவான கத்தோலிக்க சித்தாந்த்தை ஆதரிப்பது ஏன்?. //
எந்த மதத்தையும் எந்த உட்பிரிவையும் அதன் சித்தாந்தகளையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதாக இல்லை.

said...

\\நமக்கு மெலே நம்மைப் படைத்த சக்தி உண்டு என்ற நம்பிக்கைக்கும் ,ஒரு மதம் என்ற ஸ்தாபனத்தின் கோட்பாடு சடங்குகளில் உள்ள நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாத பிரகஸ்பதிகளிடம் நான் என்ன சொன்னால் புரிய வைக்க முடியும்?\\

அட நல்லா இருக்கே. நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னுதான் எல்லாருமே சொல்றாங்களே.

\\ஜெபம் செய்யும் முறை குறித்து இயேசு சொல்லும் போது அறைக்குள் சென்று கதவுகளை மூடி இறைவனுக்கும் நமக்கும் மட்டும் தெரியும் வண்ணம் ஜெபம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருப்பதை அறிந்திருந்தும் இவர்கள் இப்படி ஏன் கூச்சலிடுகின்றனர் ?இது வெளிவேடமில்லையா ? "வெளிவேடக் காரர்களே! உங்களுக்கு ஐயோ கேடு" என்று ஏசு சொன்னது இவர்கள் அறியவில்லையா?\\

இதை அறியாமல்தான் அவர்கள் செய்கிறார்கள். ஆனால் இயேசு இவ்வாறுதான் வணங்கினார் என்று பகுத்தறிவாளன் கேள்விக்கு யாருக்கும் தொந்தரவு செய்யாமல் எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம் என்று கூறுவதன் அர்த்தம் என்ன?.

ஜெபம் செய்யும் முறயை இயேசு ஒரு அறைக்குள் சென்று இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறுவது சடங்கில்லாமல் வேறு என்ன?.

இதைப் போய் இயேசுவிடமே கேளுங்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

said...

//இதைப் போய் இயேசுவிடமே கேளுங்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்//
அது எப்படி நீங்க நினைக்கிறேன் .நீங்க நினைக்குற பதிலைத் தான் நான் தந்தாக வேண்டுமென்று அடம் பிடித்தால் என்னிடம் கேட்பது அர்த்தமற்றது .நீங்க சொன்ன மாதிரி இயேசுவிடமே கேட்டு தெரிந்து கொள்ளவும்..ஹி.ஹி

said...

எனக்கு பதில் சொன்ன நண்பர் ஜோவுக்கு நன்றி.

என்னோட மொத ரண்டு கேள்விக்கு அவரோட பதில்:

1,2: //தந்தை தாயாக இருப்பதற்கு அங்கு மனித குலமே இருக்கவில்லை .இயேசுவைப்போல ஆதாம் கர்ப்பத்திலிருந்து பிறக்கவில்லை.//

அப்போ கர்ப்பத்திலிருந்த பிறந்தவங்க எல்லாம் இறை மகன்களா? சரி. ஆனா பைபிள் கர்த்தரோட வார்த்தைகளுக்கு செவிசாய்க்கிற எல்லாரயும் தான் இறை மகன்கள் அப்பிடீன்னு சொல்லுதே? அதுக்கு என்ன சொல்றீங்க?

மூணாவது கேள்விக்கு பதில்:
3. //இது பற்றி எனக்கு தெரியாது .பைபிளில் எங்கே சொல்லியிருக்குண்ணு சொன்னா படிச்சிட்டு சொல்லுறேன்//

இதுக்கான பதில் அடுத்த பதிவு.

என்னோட நாலாவது கேள்விக்கு பதில்:
4. //அவர்களெல்லாம் கன்னியிடமிருந்து பிறக்கவில்லை என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் .அது போக கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவை தேவ மைந்தனாக ஏற்றுக்கொண்டவர் கூட்டம் .நீங்கள் வேறொருவரை அவ்வாறு நினைத்தால் நீங்களும் உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்வது தானே ? ஏன் கிறிஸ்தவர்களை செய்ய சொல்லுகிறீர்கள்?//

கன்னிகள் பெறூது எல்லாம் இறை மகன்களா? இதுக்கு மேல இந்த கேள்விய விரிச்சா தப்பா அர்த்தம் கொள்ள எடம் இருக்கூதுனால இதோட நிறுத்தீரேன்.

கிறிஸ்த்துவர்கள்னா கிறிஸ்துவ பின்பற்றக் கூடியவங்கன்னு நான் தான் தப்பா புரிஞ்சிருக்கேன். இப்ப வெளங்கீட்டேன். நன்றி.

அஞ்சாவது கேள்விக்கு பதில்:
//கிறிஸ்தவர்களின் நம்பிக்கை படி தேவ மைந்தன் இயேசு சிலுவையில் அறையுண்டு ,கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து ,முழு உடலோடு வானகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தந்தையோடு ,இன்னும் உயிரோடு இருக்கிறார் .உலகின் இறுதி நாளில் ,இறுதித் தீர்ப்பு நாளில் ,வானகத்திலிருந்து இறங்கி அவர் மீண்டும் பூமிக்கு வருவார் .அதை எல்லோரும் காண்பார்கள்.இதுவே கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.//

இங்க காணூது முக்கியமில்லயே. அவரு வந்து என்ன செய்வாருன்னு கிறிஸ்த்தவர்கள் நம்பறாங்கன்னு தான் நா கேட்டேன்.

பகுத்தறிவாளன்

said...

நண்பர் ஜோவுக்கு,
ஒங்க அஞ்சாவது பதில்ல ஒரு முக்கிய விசியத்த சொல்ல மறந்துட்டேன்.

//கிறிஸ்தவர்களின் நம்பிக்கை படி தேவ மைந்தன் இயேசு சிலுவையில் அறையுண்டு ,கொல்லப்பட்டு//

இது கிறிஸ்த்தவர்களின் நம்பிக்கத்தானே தவிர பைபிள்ல அப்படி ஒண்ணும் இல்ல. இன்னும் சொல்லணும்னா தெளிவா, ஏசுவ சிலுவைல அறையும் போது அவரு கர்த்தர்ட்ட செய்த பிரார்த்தனய ஏத்து அவர கர்த்தர் காத்து இரட்சித்தார்னு தான் பைபிள்ல இருக்கு.

இந்த பதிவுக்கு காரணமான தருமி அய்யா கிறிஸ்த்தவத்துல இருந்து தான் மதம் மாறூதுக்கு சொன்ன காரணத்துல முக்கியமான ஒரு காரணம் இது. கிறிஸ்த்தவங்க பைபிள்ல இருக்கூதுக்கு மாத்தமா இப்படி அபத்தமா நம்பூதுனால தான் தருமி அய்யா போன்ற மெத்த படித்த ஆனா தன்னோட வேத புத்தகத்தயே ஒழுங்கா படிக்காத மேதாவிகள்லாம் அபத்தமா காரணங்கள அடுக்கீட்டு மதம் மாறீர்ராங்க.

இதக் குறிச்சு பேசத்தான் தருமி அய்யாவ நா தொடந்து கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.

ஏசுவோட பிரார்த்தனய ஏத்து ஏசுவ கர்த்தர் காத்து ரட்சித்து விட்டார்னு பைபிள்ல வரூத நா நிரூபிச்சிட்டா அவசரப்பட்டு தன் மதத்து மேல இல்லாதத சேறு வாரி பூசீட்டு அவசரப்பட்டு மதம் மாறுன தருமி அய்யா தன்னோட கருத்துக்கள திரும்ப எடுத்துக் கொள்ள தயாரா?

நண்பர் ஜோவுக்கும் அதே போல ஒரு சவால்:

கிறிஸ்த்தவங்க நம்பூது போல ஏசு சிலுவைல கொல்லப்படல; அவரு கர்த்தர்ட்ட செஞ்ச பிரார்த்தனய ஏத்து கர்த்தர் அவர காத்து ரட்சித்து விட்டாருன்னு பைபிள்ல வருவத நா நிரூபிச்சிட்டா கிறிஸ்த்தவங்களோட நம்பிக்க தவறானதுன்னு ஒத்துக்குவீரா?

இது தொடர்பா விவாதிக்க நா எப்பவுமே தயாரா இருக்கேன்.

பகுத்தறிவாளன்.

said...

விதண்டாவாதமே உன் பெயர் தான் பகுத்தறிவாளனோ!

//அப்போ கர்ப்பத்திலிருந்த பிறந்தவங்க எல்லாம் இறை மகன்களா?//
ஓகோ! முன்னால சொன்னத விட்டுட்டு ரொம்ப இடக்கா கேக்குறீங்களாக்கும் .ஆமாங்க ! யாருடைய விந்துவின் மூலமாக அன்றி கர்ப்பத்திலிருந்து பிறந்தவர் தேவ மைந்தன் தான்.

//ஆனா பைபிள் கர்த்தரோட வார்த்தைகளுக்கு செவிசாய்க்கிற எல்லாரயும் தான் இறை மகன்கள் அப்பிடீன்னு சொல்லுதே?//
இந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் தான் . அப்போ இயேசு மட்டும் என்னா உசத்தின்னு நீங்க கேட்டா அதற்கு ஏற்கனவே பதில் சொல்லியாச்சு.

//கன்னிகள் பெறூது எல்லாம் இறை மகன்களா? இதுக்கு மேல இந்த கேள்விய விரிச்சா தப்பா அர்த்தம் கொள்ள எடம் இருக்கூதுனால இதோட நிறுத்தீரேன்.//
அது உங்க இஷ்டம்.

//கிறிஸ்த்துவர்கள்னா கிறிஸ்துவ பின்பற்றக் கூடியவங்கன்னு நான் தான் தப்பா புரிஞ்சிருக்கேன். இப்ப வெளங்கீட்டேன். //
ஏதவது ஓண்ணாவது விளங்கினா சரி!

//இங்க காணூது முக்கியமில்லயே. அவரு வந்து என்ன செய்வாருன்னு கிறிஸ்த்தவர்கள் நம்பறாங்கன்னு தான் நா கேட்டேன்.//
தெரியல்லீங்க..நான் அதுவரைக்கும் தான் படிச்ச ஞாபகம் .உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க!

//கர்த்தர்ட்ட செய்த பிரார்த்தனய ஏத்து அவர கர்த்தர் காத்து இரட்சித்தார்னு தான் பைபிள்ல இருக்கு.//
நான் படிச்ச பைபிள்ல அப்படி இல்லீங்க.

//நண்பர் ஜோவுக்கும் அதே போல ஒரு சவால்:

கிறிஸ்த்தவங்க நம்பூது போல ஏசு சிலுவைல கொல்லப்படல; அவரு கர்த்தர்ட்ட செஞ்ச பிரார்த்தனய ஏத்து கர்த்தர் அவர காத்து ரட்சித்து விட்டாருன்னு பைபிள்ல வருவத நா நிரூபிச்சிட்டா கிறிஸ்த்தவங்களோட நம்பிக்க தவறானதுன்னு ஒத்துக்குவீரா?//

நீங்க சொந்தமா எழுதிய பைபிள்ள இல்லாம கிறிஸ்தவர்கள் உபயோகிக்கிற பைபிள்ள இருந்து நிரூபிச்சா ஒத்துக்கிட்டு போறேன் .இதுல என்னங்க இருக்கு ?