Monday, March 13, 2006

யார் "அந்த தீர்க்கதரிசி"?

அன்புள்ள தோமா அவர்களுக்கு,

கடந்த முறை நான் பின்னூட்டமிட்ட பிறகு நீங்கள் மூன்று பதிவுகள் போட்டு விட்டீர்கள். ஆனாலும் என் பின்னூட்டம் உங்கள் பதிவில் வராததால் தான் நான் சற்று அவசரப்பட்டு விட்டேன். காரணம் வேறொன்றுமில்லை. இதற்கு முன் இதுபோல் ஒரு சில அன்பர்கள் நல்ல முறையில் விவாதிக்கலாம் எனக் கூறி சம்மதித்து விட்டு பின்னர் நொண்டி காரணங்கள் கூறி ஒதுங்கியதாலும், வேறு சிலர் என்னுடைய பின்னூட்டத்தையே அனுமதிக்காததாலும் நீங்களும் அது போல் தானோ என தவறாக நினைத்து விட்டேன். மன்னிக்கவும். நான் உங்களின் அலுவல்களில் குறுக்கிடுவதாக நினைக்க வேண்டாம். என் சந்தேகங்கள் நியாயமானவையாக இருந்தால் அனுமதியுங்கள். பின்னர் உங்களுக்கு நேரம் கிடைப்பது போல் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அது போதும்.

என் சந்தேகங்களுக்கு தனி பதிவாகவே பதிலிடுவதற்கு மிக்க நன்றி. மோசே முன்னறிவித்த "அந்த தீர்க்கதரிசி" யைக் குறித்த உங்கள் கருத்தினை படித்தேன். சாதாரணமாக மற்றவர்கள் கூறும் அதே பதிலைத் தான் கூறுகிறீர்கள். நான் கிறிஸ்தவ அன்பர்கள் யாரிடம் இது குறித்து கேட்டாலும் அவர்கள் கூறும் பதில் இது தான். உங்கள் நம்பிக்கையை நான் எதிர்க்கவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை. இது குறித்த என்னுடைய கருத்தினை மட்டும் வைக்கிறேன். தவறெனில் சற்று விளக்குங்கள்.

பழைய ஏற்பாட்டில் மோசே மட்டுமல்லாமல் பல தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்த "அந்த தீர்க்கதரிசி" இயேசுவாக இருக்க சாத்தியமில்லை. காரணம்,

1. "அந்த தீர்க்கதரிசியைக்" குறித்து இயேசுவும் முன்னறிவித்திருக்கிறார். "நான் போய் அவரை அனுப்பி வைப்பேன். நான் போகவில்லையெனில் அவர் வர மாட்டார்" என புதிய ஏற்பாடு - யோவான் 16:7 -ல் இயேசு கூறியதாக வருகிறது. தன்னைப் பற்றி தானே இயேசு முன்னறிவித்தார் என்று நம்ப முடியுமா?

2. இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் வந்தவர். நான் எடுத்துக்காட்டிய உபாகமம் கடைசி வசனத்தில், "மோசே போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமுதாயத்தில் பின்னர் எழும்பினதில்லை" என வருகிறது. இயேசு தான் அந்த தீர்க்கதரிசி எனில் இந்த வசனம் பொய்யாகிறது. பைபிளின் இவ்வசனம் உண்மையெனில் நிச்சயமாக "அந்த தீர்க்கதரிசி" இயேசுவாக இருக்க முடியாது. இந்த இரண்டில் எதை நீங்கள் சரி காண்கிறீர்கள். அல்லது இரண்டையும் சரி காண இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் பிறக்கவில்லை எனக் கூற வேன்டும். நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்களா?

3. "மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பைபிள் கூறும் அடையாளங்கள்:

i) பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள் - உபாகமம் (34:10,11)
ii) கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர். உபாகமம் (34:12)

இங்கு "மோசேயை போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பார்வோனுக்கு எதிராக செய்த கிரியைகளும், கர்த்தரை முகமுகமாய் அறிந்ததும் அடையாளங்களாக பைபிள் கூறுகிறது. இந்த இரண்டுமே இயேசுவுக்கு பொருந்தாத போது பைபிள் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி எப்படி இயேசுவாக முடியும்.

4. இனி நீங்கள் ஆதாரமாக கூறும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் கூட மோசே முதல் பல தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த அந்த தீர்க்கதரிசி இயேசு தான் என்பதற்கு ஆதாரமானவையாக இல்லை. மறித்து நீங்கள் காட்டியிருக்கும் வசனங்கள் இயேசுவின் பாடுகளும் அப்பாடுகளிலிருந்து அவரை கர்த்தர் (அவர் கொல்லப்படுவதிலிருந்து) காத்தருளியதற்கும் உள்ள ஆதாரங்களாகும். இதனைக்(இயேசுவின் சிலுவை மரணம்) குறித்து உங்களுக்கு விருப்பம் எனில் பின்னர் சர்ச்சை செய்வோம். அப்பொழுது இவ்வசனங்கள் எவ்வாறு அதற்கு ஆதாரமானவை என்று கூறுகிறேன்.

உங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்கு ஆவலுடன் காத்திருக்கும்,

பகுத்தறிவாளன்.

Wednesday, March 08, 2006

மோசே போன்ற தீர்க்கதரிசி யார்?

அன்புள்ள தோமா அவர்களுக்கு,

பொறுமையாக ஒரு பதிவாகவே என்னுடைய கேள்விக்கு பதிலளித்ததற்கு மிக்க நன்றி. மிகத் தெளிவாக கர்த்தர் வேறு இயேசு வேறு என்று பைபிளின் கருத்தினை சார்ந்து பதிலளித்துள்ளீர்கள்.

//எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.//

இதனை அப்படியே நம்புகிறவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன். அதாவது இயேசுவின் போதனைகளை அவரின் வார்த்தைகளை, கட்டளைகளை நம்பாதவன் ஒருவனும் உண்மையான முஸ்லிமாக முடியாது. அந்த அடிப்படையில் நானும் அவரின் வார்த்தைகளை முழுமையாக நம்புகிறேன். இதனைக் குறித்து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனெனில் ஒரு சில விஷயங்களில் தவறான புரிந்துணர்வினால் பிரிந்திருந்தாலும் அடிப்படையில் யூத, கிறிஸ்த்தவ, முஸ்லிம் சமுதாயம் ஒரே கொள்கையுடையது தான் என்பது என் அபிப்பிராயம். அந்த ஒரு சில தவறான புரிந்துணர்வுகளை சரியாக புரிந்து கொண்டால் இவை ஒரே வழியில் போவதற்கு சாத்திய கூறு நிறைய உண்டு. அதனால் இந்த இரு சமுதாயங்களின் அடிப்படை வேறு பாடுகளைக் குறித்து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவதில் தவறில்லை என நினைக்கிறேன். அதனால் ஓர் நன்மை விளையுமெனில் அது நியாய தீர்ப்பு நாளை நம்பும் நம் இருவருக்கும் பயன் விளைவிக்கும் அல்லவா?

இனி நான் உங்களிடம் கேட்க விரும்பியதாக கூறிய அந்த முன்னறிவிப்பினைக் குறித்து:

பழைய ஏற்பாடு - மோசேவைக் குறித்து கூறப்படும் உபாகமம் என்ற புத்தகத்தில் மோசேக்குப் பின் வரும் ஓர் தீர்க்கதரிசியைக் குறித்து ஒரு முன்னறிவிப்பு உண்டு. அது இவ்வாறு கூறுகிறது:

15. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்@ அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
16. ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
17. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
20. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
21. கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
22. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை@ அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்@ அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபாகமம் (18:15-22)


அதாவது மோசேயைப் போன்ற ஓர் தீர்க்கதரிசி வருவார் என்று மோசே இஸ்ரவேலர்களைப் பார்த்தும், கர்த்தர் மோசேயைப் பார்த்தும் கூறுவதாக வருகிறது. அதே உபாகமம் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில்,

10. மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,
11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,
12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். உபாகமம் (34:10-12)


அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. தற்போது கிறிஸ்த்தவ சமுதாயமும், முஸ்லிம் சமுதாயமும் இயேசுவின் வருகையை(அந்திம நாளின் அடையாளம்) எதிர் பார்த்து காத்திருப்பதிலிருந்து கர்த்தர் மோசேக்கு அறிவித்த அந்த மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி வந்து விட்டார் என்று தானே அர்த்தம். எனில் அந்த தீர்க்கதரிசி யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சற்று விளக்க முடியுமா?

திரு தோமா அவர்களின் பதில்:


பகுத்தறிவாளன் Sir..எனது தாமதமான பதிலுக்கு மிகவும் வருந்துகிறேன்.சில அலுவல்களால் உடனடியாக என்னால் பதிலளிக்க இயலவில்லை.இனிமேல் முடிந்தவரை சீக்கிரம் பதிலளிக்க முயலுவேன்.என் நிலையை புரிந்துகொள்வீர்கள்என நம்புகிறேன்.இனி உங்கள் கேள்விகளுக்கான எனது பதில்கள்.

கேள்வி:அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. தற்போது கிறிஸ்த்தவ சமுதாயமும், முஸ்லிம் சமுதாயமும் இயேசுவின் வருகையை(அந்திம நாளின் அடையாளம்) எதிர் பார்த்து காத்திருப்பதிலிருந்து கர்த்தர் மோசேக்கு அறிவித்த அந்த மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி வந்து விட்டார் என்று தானே அர்த்தம். எனில் அந்த தீர்க்கதரிசி யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சற்று விளக்க முடியுமா?

பதில்:மோசே முன்னறிவித்த அந்த நபர் யேசு என்பது எனது நம்பிக்கை.அதற்கான ஆதார பைபிள் வசனங்கள் கீழே.
மோசே மட்டுமல்ல இன்னும் பிற தீர்க்கதரிசிகளும் யேசு பிறப்பை முன்னறிவித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன்.
----------------------------------------------------------------------
லூக்கா 24:27 மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மை(யேசு)க்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
----------------------------------------------------------------------
லூக்கா 24:44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்(யேசு) குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
---------------------------------------------------------------------
யோவான் 1:45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
---------------------------------------------------------------------
யோவான் 5:46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்(யேசு)குறித்து எழுதியிருக்கிறானே.
----------------------------------------------------------------------
அப்போஸ்தலர் 26:23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
----------------------------------------------------------------------
அப்போஸ்தலர் 3:22 மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.23. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.
24. சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
25. நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.
26. அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்
-----------------------------------------------------------------------------
உங்கள் கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேன்என நினைக்கிறேன்.இல்லையெனில்எனக்கு தெவிவியுங்கள்.நன்றி.

கர்த்தரும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?

திரு தோமா அவர்களோடு பைபிளைக் குறித்து செய்யும் கருத்து பரிமாற்றத்தை இங்கு பதிக்கிறேன்.

தாங்கள் கூறும் பல விஷயங்கள் "மறுக்க முடியாத நிஜங்களே". நான் ஒரு முஸ்லிம் என்ற நிலையில் மாற்றப்படாத பைபிளை இறை வேதம் என நம்புகிறேன். உங்கள் கூற்றுபடியே இறைவேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இன்று நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதை அனைத்தையும் முழுமையாக நம்புபவனே முழுமையான இறை விசுவாசி ஆக முடியும். ஆனால் இன்று பலர் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட பல விஷயங்களில் முக்கியமானதை விட்டுவிட்டு ஒரு சிலவற்றை மட்டுமே நம்புகின்றனர். பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன்.

தற்போது நீங்கள் எழுதியிருக்கும் பதிவுகளிலிருந்து ஓர் சந்தேகம்.

//அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//

இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது.

//பைபிள் சொல்லுகிறது“இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று.”//

இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி.

நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?

திரு தோமா அவர்களின் பதில்:


உங்கள் கம்மென்ட்-க்கு மிக்க நன்றி பகுத்தறிவாளன்.உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது.வியப்பைத்தருகிறது.உங்கள் கேள்விகளும் எனது பதில்களும் இங்கே...
நான் இதிலெல்லாம் பண்டிதன் இல்லை. எனினும் முயல்கிறேன் Mr.பகுத்தறிவாளன்.

பகுத்தறிவாளன்:"பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன்."

தோமா:உங்கள் கேள்வியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

பகுத்தறிவாளன்://பைபிள் சொல்லுகிறது"இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று."// இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி.

தோமா:இங்கு மகாதேவன்என்பது ----தேவனாகிய கர்த்தர்
இங்கு ராஜா என்பது -அக்காலத்தில் பாபிலோனை ஆண்ட நேபுகாத்நேச்சார் ராஜா .தேவனாகிய கர்த்தர் இந்த ராஜாவுக்கு காண்பித்த சொப்பனத்திற்க்கு தானியேல் இங்கு அர்த்தம் சொல்கிறான்.இங்கு ராஜாஎன்பது யேசுவை குறிக்கவில்லை.

பகுத்தறிவாளன்://அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது

தோமா:சொப்பனத்தில் கண்ட அந்த கல் தான் யேசு.
வெளி:20:6. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

பகுத்தறிவாளன்:நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?

தோமா:எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.

யோவான் :12:44. அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
யோவான் :14:6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

உங்கள் ஆரோக்கியமான விவாதத்துக்கு மிக்க நன்றி.