Wednesday, March 08, 2006

கர்த்தரும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?

திரு தோமா அவர்களோடு பைபிளைக் குறித்து செய்யும் கருத்து பரிமாற்றத்தை இங்கு பதிக்கிறேன்.

தாங்கள் கூறும் பல விஷயங்கள் "மறுக்க முடியாத நிஜங்களே". நான் ஒரு முஸ்லிம் என்ற நிலையில் மாற்றப்படாத பைபிளை இறை வேதம் என நம்புகிறேன். உங்கள் கூற்றுபடியே இறைவேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இன்று நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதை அனைத்தையும் முழுமையாக நம்புபவனே முழுமையான இறை விசுவாசி ஆக முடியும். ஆனால் இன்று பலர் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட பல விஷயங்களில் முக்கியமானதை விட்டுவிட்டு ஒரு சிலவற்றை மட்டுமே நம்புகின்றனர். பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன்.

தற்போது நீங்கள் எழுதியிருக்கும் பதிவுகளிலிருந்து ஓர் சந்தேகம்.

//அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//

இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது.

//பைபிள் சொல்லுகிறது“இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று.”//

இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி.

நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?

திரு தோமா அவர்களின் பதில்:


உங்கள் கம்மென்ட்-க்கு மிக்க நன்றி பகுத்தறிவாளன்.உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது.வியப்பைத்தருகிறது.உங்கள் கேள்விகளும் எனது பதில்களும் இங்கே...
நான் இதிலெல்லாம் பண்டிதன் இல்லை. எனினும் முயல்கிறேன் Mr.பகுத்தறிவாளன்.

பகுத்தறிவாளன்:"பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன்."

தோமா:உங்கள் கேள்வியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

பகுத்தறிவாளன்://பைபிள் சொல்லுகிறது"இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று."// இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி.

தோமா:இங்கு மகாதேவன்என்பது ----தேவனாகிய கர்த்தர்
இங்கு ராஜா என்பது -அக்காலத்தில் பாபிலோனை ஆண்ட நேபுகாத்நேச்சார் ராஜா .தேவனாகிய கர்த்தர் இந்த ராஜாவுக்கு காண்பித்த சொப்பனத்திற்க்கு தானியேல் இங்கு அர்த்தம் சொல்கிறான்.இங்கு ராஜாஎன்பது யேசுவை குறிக்கவில்லை.

பகுத்தறிவாளன்://அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது

தோமா:சொப்பனத்தில் கண்ட அந்த கல் தான் யேசு.
வெளி:20:6. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

பகுத்தறிவாளன்:நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?

தோமா:எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.

யோவான் :12:44. அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
யோவான் :14:6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

உங்கள் ஆரோக்கியமான விவாதத்துக்கு மிக்க நன்றி.

1 comments:

said...

//தோமா:எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.//

Then why we are worshipping Jesus alone and not the "Pitha". I haven't seen any church for the "Pitha".