Thursday, June 15, 2006

நண்பர் வசந்தன் அவர்களுக்கு........

//விவிலியத்தில் எங்குமே நீங்கள் சொன்னவாறு சொல்லப்படவில்லை. இயேசு உயிர்நீத்தது, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது, உயிர்த்தெழுந்தது என்றவாறு தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் பைபிள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.//

விடமாட்டீர்கள் போல் உள்ளது.

நான் இக்கேள்வியை வைத்தது தருமி சாருக்காக. தான் மதம் மாறியதற்கான காரணமாக "இயேசுவின் சிலுவை மரணத்தைக்" குறிப்பிட்டதை நான் அவ்வாறு பைபிளில் இல்லையே என்று மறுத்தேன். மட்டுமல்ல இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக உள்ளதே என்றும் கேள்வியை வைத்தேன்.

கிறிஸ்த்தவர்களின் மத அடிப்படையையே தகர்க்கும் இக்கேள்வியை தருமி அவர்கள் திரும்பி கூட பார்க்கவில்லை.

இதே விஷயத்தை நான் நண்பர் இராகவன் பதிவில் அவருடைய ஒரு கேள்விக்கு பதிலாக வைத்திருந்தேன். அதை இது வரை யாரும் சீண்டி கூட பார்க்கவில்லை.

எல்லோருக்கும் பயம். என்னிடம் அப்படி எங்கே இருக்கிறது எனக் கேட்டு நான் எடுத்துக் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். முக்கியமாக இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஒரு கிறிஸ்த்தவருக்கு கூட "பைபிளில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை" என்று உறுதியாக கூற தைரியம் வராதது தான்.

பைபிளை முழுமையாக படித்திருந்தால் அல்லவா இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் பொழுது இவர்களால் பதிலளிக்க முடியும்.

எது எப்படி இருந்தாலும் இது வரை யாருமே கூறாத நான் எதிர்பார்த்த பதிலோடு நண்பர் வசந்தன் அவர்கள் வந்துள்ளார்கள்.

பரவாயில்லை. தருமி அவர்களை இக்கேள்வியை வைத்து அவர் "மதம் மாறியதை" கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். அவரிடம் தான் இதற்கான பதிலை கூற வேண்டுமா என்ன?

வசந்தன் அவர்களே உங்களிடம் இதற்கான பதிலை, அதாவது "இயேசுவை கர்த்தர் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றினார்" என்பதற்கு ஆதாரம் நிச்சயமாக பைபிளிலிருந்து என்னால் கொடுக்க முடியும். அதற்கு முன் உங்கள் பதிலிலிருந்து சில சந்தேகங்கள் கேள்விகள் எழுந்துள்ளன. அதனை நீங்கள் எனக்கு தெளிவு படுத்த முடியுமா?

//நீங்கள் பைபிள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.// என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

நான் நினைத்துக் கொண்டிருப்பது புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் அடங்கிய கிறிஸ்தவர்கள் வேத நூலாக கருதுவதைத் தான் பைபிள் என நினைக்கிறேன்.(தேவையெனில் என்னிடம் இருக்கும் பைபிளின் அச்சக பதிப்பு விவரங்களை தருகிறேன்.)

இனி நீங்கள் எதை பைபிள் என்று கருதுகிறீர்கள் என்பதை கூற முடியுமா? ஏனெனில் நான் ஆதாரத்தை எடுத்து தரும் போது இது பைபிள் அல்ல என்று கூறி விடக் கூடாது அல்லவா?

//நீங்கள் சொல்வது போல் பவுல் அவர்களால் செருகப்பட்டிப்பதாக சொல்வதும் புரியவில்லை. பவுலின் திருமுகங்கள் எவையும் இயேசுவின் வாழ்க்கைக் காலத்தைச் சொல்வதில்லை.//

இல்லை தான். ஆனால் இயேசு பின்பற்றிய கர்த்தரின் சட்டதிட்டங்களை மாற்றி இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு அடிகோலியவர் பவுல் என்கிறேன். இதற்கு என்னால் பவுலின் நிரூபங்களிலிருந்தும்(புறஜாதியருக்கு எழுதிய கடிதங்களிலிருந்து)அதற்கு எதிரான கொள்கைகளை பைபிளிலிருந்தும் என்னால் எடுத்து காண்பிக்க இயலும்.

//இயேசுவின் வாழ்க்கையை எழுதியவர்கள் நால்வர் மட்டுமே.//

அது இன்று நிலுவையில் இருக்கும் புதிய ஏற்பாட்டின் படி. ஆனால் இயேசுவின் வாழ்க்கையை எழுதியவர்கள் உண்மையில் நால்வர் தானா? யோசித்துப் பாருங்கள்.

//இயேசுவை என்று நீங்கள்தான் அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளீர்கள். அடைப்புக்குறிக்குள் சொல்வது குர்-ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் முறை.//

நான் பைபிளில் வரும் வசனத்திலிருந்து ஒரு பகுதியை தான் எடுத்து வைத்தேன். அது அதற்கு முந்தைய வசனத்தின் படி புரிய வேண்டுமென்பதற்காகத் தான் இயேசுவை அடைப்புக் குறியில் இட்டேன். முழுவசனத்தையும் காண்பிக்கும் பொழுது இதற்கான தேவையிருக்காது. குரானுக்கு விளக்கம் கொடுக்கும் முறையை பற்றி தேவையெனில் மற்றொரு பதில் பார்ப்போம். இது அதற்கான இடம் இல்லை.

//விவிலியத்தில் கர்த்தர் என்பது இயேசுவைத்தான் குறிக்கிறது.//


உங்கள் பதிலிலிருந்து என்னுடைய முக்கியமான கேள்வியே இதனைக் குறித்து தான்.

நான் "இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காப்பாற்றினார்" என்கிறேன். அதுவும் பைபிளில் வருகிறது என்கிறேன்.

நீங்கள் இயேசு தான் கர்த்தர் என்கிறீர்கள். நீங்கள் கூறுவது உண்மையெனில் நான் கூறும் விஷயமே அடிபட்டு போகும். நீங்களும் பைபிளில் வரும் கர்த்தர் என்ற வார்த்தை இயேசுவை குறிப்பதாக கூறியிருக்கிறீர்கள்.

இதற்கு ஆதாரத்தை அதாவது "இயேசு தான் கர்த்தர்" என்பதாக பைபிளில் எங்கு வருகிறது என்று சற்று காண்பியுங்களேன்.

இயேசு அவ்வாறு கூறியதாகவோ அல்லது பரிசுத்த ஆவி அவ்வாறு கூறியதாகவோ அல்லது கர்த்தர் அவ்வாறு கூறியதாகவோ அல்லது ஏதாவது அசரீரி அவ்வாறு கூறியதாகவோ பைபிளிலிருந்து ஒரு வசனத்தையாவது நீங்கள் காண்பிக்க இயலுமா?

அதற்கு முன் நான் உங்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சிந்திப்பதற்கும் எனக்கு விளக்குவதற்கும் பைபிளிலிருந்து ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.


"ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்."


மேலே குறிப்பிட்ட வசனம் இயேசுவை சிலுவையில் அறைந்த பொழுது அதிலிருந்து அவர் செய்த பிரார்த்தனை அல்லது அழைப்பாகும். இது தங்களுக்கு நன்றாக தெரியும் என நினைக்கிறேன். புதிய ஏற்பாட்டில் மத்தேயு 27 ஆவது அதிகாரம் 46 ஆவது வசனமாக மேற்கண்ட வசம் வருகிறது.

நீங்கள் "இயேசு தான் கர்த்தர்" என்பதற்கான ஆதாரத்தை வைக்கும் பொழுது மேற்கண்ட வசனத்தில் "இயேசு அழைத்தது யாரை" என்பதையும் சற்று விவரிக்க கோருகிறேன்.

2 comments:

said...

நீங்கள் பைபிள் என்று எதைச்சொல்கிறீர்கள் என்று கேட்டது குர்-ஆனைத்தான் பைபிள் என்று சொல்கிறீர்களா என்ற அருத்தத்தில். அதை நக்கலாகவே எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் எந்த பைபிளிலும் இயேசு கொல்லப்படவில்லை என்று சொல்லப்படவில்லையென்று இன்றுவரை உறுதியாக இருக்கிறேனது.

நிற்க, கர்த்தர் குறித்த விளக்கத்திலிருந்து நான் பின்வாங்குகிறேன். காரணம், நீங்கள் வைத்திருப்பது கத்தோலிக்கருக்குரிய விவலியமன்று எனப்புரிந்துகொண்டேன். அதில் கர்த்தர் என்று குறிப்பிடப்படுவது யாரென்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

ஆனால் எந்தப் பிரிவினைச் சபையைச் சேர்ந்த விவிலியமென்றாலும் இயேசு கொல்லப்பட்டதை, உயிர்த்ததை மறுத்து எழுதியதாக நான் அறியவில்லை. அதைச் சொல்லவேண்டியது நீங்கள்தான்.


இனியும் இதுதொடர்பில் இழுத்துக்கொண்டு போக எனக்கு விருப்பமில்லை. கத்தோலிக்கம் குறித்தோ விவிலியம் குறித்தோ நான் வக்காலத்து வாங்கப் போவதில்லை. சொல்லப்போனால் அவற்றை விமர்சித்து பதிவுகள்கூட எழுதியே இருக்கிறேன்.
போகிற போக்கில் உங்கள் கேள்வி கண்ணிற்பட்டது. இல்லாத ஒன்றை வைத்து ஒருவர் கேள்விகேட்டுக்கொண்டிருக்கிறாரே என்று தோன்றியது. அதனால்தான் உங்களுக்குப் பதிலெழுதினேன்.
அப்படிச் சொல்லப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் தெளிவுபடுத்தினால்சரி. மேற்கொண்டு அதிகம்இழுத்தடிக்கத் தேவையில்லை. எனக்கு இதுமட்டில் எந்த சுவாரசியமும் இல்லை.
தனிப்பதிவுகூடப் போடவேண்டாம். ஒரேயொரு பின்னூட்டம் போட்டுவிடுங்கள் போதும்.

said...

பகுத்தறிவாளன் சார்,
முதலாவதாக தங்கள் விவாதங்களுக்கு நடுவே நான் புகுவதில் உங்களுக்கு

ஆட்சேபனை இல்லை என நினைக்கிறேன்.என் சிறிய அறிவுக்கு எட்டிய வரையான

எனது பதில்கள் கீழே.

யேசுவும் கர்த்தரும் வேறா?
இக்கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை-இரண்டும் தான்.
யேசு பூமியில் மனிதனாய் வாழ்ந்திருந்த காலத்தில் மனிதனாகவே

வாழ்ந்திருந்தார்.சராசரி மனிதனுக்கு இருந்த அன்றாட

தேவைகள்,சம்பவங்கள்,பசி,வலி,கண்ணீர்,உணர்வுகள் அவர்க்கும் இருந்தது.அவரே

கடவுள் என்றால் ஏன் அவரும் ஜெபம் செய்திருக்க வேண்டும்.பைபிளில் அவர் 40

நாள் உபவாசம் இருந்து ஜெபம் செய்தார் என்று பார்க்கிறோமே.ஆக அவர் பூமியில்

இருந்த நாட்களில் "மனிதனாகவே" இருந்தார்.ஜெபம் செய்வது எப்படி என செய்து

காட்டினார்.தன் கடைசி நொடிவரை மனித குணத்தை அவர் இழக்கவில்லை.ஆனால்

he represented God.பொதுவாக இவ்வுலகில் power of attrony கொடுத்தவரும்

கொடுக்கப்பட்டவரும் தனி மனிதர்கள். ஆனால் சட்டப்படி அவர்கள் இருவரும்

ஒருவரே.கணவனும் மனைவியும் வேறா?
இக்கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை இரண்டும் தானே.


ஆக ஒரு மனிதனான யேசுவும் கர்த்தரும் வேறு.
யோவான்:16:28. நான் (யேசு) பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே

வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு பிதா(கர்த்தர்)வினிடத்திற்குப் போகிறேன்

என்றார்.

ஆனால் ஆவியில் யேசுவும் கர்த்தரும் ஒன்று
யோவான்:17:21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை (யேசு)

அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும்

(கர்த்தர்) இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும்

வேண்டிக்கொள்ளுகிறேன்

கடவுள் தன்னை மனிதனாக தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:8 அவர் (யேசு) மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம்,

அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே

தாழ்த்தினார்.

யோவான்:14
8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே(யேசு), பிதாவை எங்களுக்குக் காண்பியும்,

அது எங்களுக்குப் போதும் என்றான்.
9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ

என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்;

அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?

நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை;

என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச்

செய்துவருகிறார்.11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்;

அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக உள்ளதே?"இயேசுவை கர்த்தர் சிலுவை

மரணத்திலிருந்து காப்பாற்றினார்? ---- யேசுவை கர்த்தர் காப்பாற்றியிருந்தால்

யேசுவை யூதர்கள் கொன்றிருக்க முடியாதே.எப்படியாவது தப்பியிருப்பாரே.சிலுவை

மரணம் நிகழ்ந்திருக்காதே.அதாவது யேசு உலகிற்க்கு வந்த நோக்கம்

நிறைவேறாமலே போயிருக்கும்.

தொடரும் நம் தேடல்கள் ஆரொக்கியமாய் அமைய வாழ்த்துக்கள்.