Sunday, June 11, 2006

விடைதெரியா பின்னூட்டங்கள் - 1

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களை மட்டுறுத்தும் நிபந்தனையைக்
கொண்டு வந்ததால் போலிகளின் ஆபாசத் தாக்குதல்கள் குறைந்ததோ இல்லையோ நியாயமான தங்களது கருத்துக்கு எதிரான கேள்விகளைக் கொண்டு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது மட்டும் ஜோராக நடக்கிறது. பின்னூட்ட மட்டுறுத்தல் மூலம் பயனடைந்தவர்களில் இப்படிப்பட்டவர்கள் தான் அதிகம்.

"மதம் மாறிய தொடர்" தருமி அவர்களை தமிழ்மணம் அறிந்த தமிழர்கள் அனைவரும் அறிவர். இவர் மதம் மாறியதன் 9(தற்போது 21) காரணங்களில் மிக முக்கியமான காரணமாக அவர் தெரிவித்த "இயேசுவின் சிலுவை மரணம்" குறித்து நான் எழுப்பிய கேள்வியை அவர் அவருடைய பதிவில் குறைந்தபட்சம் அனுமதிக்கக்கூட இல்லை.

தொடர்ந்து அவர் செல்லும் சில இடங்களில் அக்கேள்வியை சார்ந்து நான் வைக்கும் கேள்வியையும் இதுவரை அவர் கண்டு கொண்டதே இல்லை. அங்கும் சில இடங்களில் என் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

எனவே பெரியவர் டோண்டு அவர்களின் பாணியை கடைபிடிக்கலாம் என முடிவெடுத்து முதல் பதிவாக இதனை வைக்கிறேன். இனி எங்கெல்லாம் என் நியாயமான கேள்விகளை வைத்து பின்னூட்டுகிறேனோ அவையெல்லாம் பதிவுகளாக இங்கு தொகுக்கப்படும்.(அவை அங்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படவில்லையெனினும்).

நல்லடியார் அவர்களின் பெண்ணியம் முதல் பதிவில் நான் இவ்வாறு பின்னூட்டியிருந்தேன்.


//முன்னாள் கிறிஸ்தவர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட ஒரு பெண்ணியவாதி//

தருமியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

சரி தான் எனில், பிழைத்து போகட்டும். விட்டு விடுங்கள்.

அவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளி வருவதற்கு காரணமாக அடுக்கிய ஒம்போது காரணங்களில் முக்கிய காரணமான "இயேசு சிலுவையில் உயிர் நீத்ததைக்" குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதிலே வரவில்லை. குறைந்த பட்சம் நாகரிகம் கருதி அக்கேள்வியை பிரசுரிக்க கூட இல்லை.

இவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளிவந்தவர் தானா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.

தெளிவாக சொல்வதெனில் இவர் பைபிளையே ஒழுங்காக படிக்கவில்லை என்பது என் கேள்வியை மறைத்ததிலிருந்தே தெரிகிறது.

அப்படி இருக்கையில் குரானைக் குறித்தும் இஸ்லாத்தைக் குறித்தும் இவருக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது.

அது தான் அவருடைய இஸ்லாத்தில் ஏவாளுக்கு பெயரே இல்லை என்ற வெளிப்படுத்தல்.

யார் யாரோ கக்குவதை இவர் வாந்தியெடுப்பது தெளிவாகத் தெரிகிறது. போகட்டும் ச.... விட்டுத்தள்ளுங்கள்.


நல்லடியாரின் பெண்ணியம் இரண்டாவது பதிவில் தமிழ்செல்வன் அவர்களின் பின்னூட்டமும் அதற்கு தருமி அவர்களின் பதிலும்:


"அட தருமி அய்யா. ஆச்சரியமாக இருக்கிறது! நீங்கள் வலைப்பதிவில் இருக்கிறீர்களா? தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதற்கு முந்தைய திரு. நல்லடியார் அவர்களின் "பெண்ணிய" பதிவில் ஏதோ இரண்டு "பகுத்தறிவாள" அரைவேக்காடுகள் உங்களை குறித்து ஏதோ கூறியதாக ஞாபகம். நீங்கள் பதில் கூறுவீர்கள் என எதிர் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

இதுவரை அதில் உங்கள் மறுமொழியினை காணாததால் கேட்டேன்."

இதற்கு தருமி அவர்களின் பதில்:


"தமிழ்ச்செல்வன்,
உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன்.
என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க...என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!! அதோடு நதியைக் கடக்க தன் தோளில் பெண்ணைத் தூக்கிச் சென்ற குருவைப்பார்த்து சீடர்கள் கேட்ட கேள்வியும், குருவின் பதிலும் நினைவுக்கு வந்தன."

இதற்கு நான் வைத்த பதில்,


//தமிழ்ச்செல்வன்,
உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன்.
என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க...என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!!//

நழுவல் அருமை.

எப்படி உங்களால் மட்டும் இதற்கு முடிகிறது?

"நான் ஏன் மதம் மாறினேன்" என்று காரணங்களை அடுக்குவீர்கள்.

அவைகளில் பல அபத்தங்கள் உள்ளனவே எனச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்டால், "ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்" என புழகாங்கிதமடைந்து யாராலும் வழங்க முடியாத அதியற்புத பதிலைத் தருவீர்கள்.

"மதம் மாறிய" தொடர் பதிவுகளின் காரணமென்ன என இப்பொழுது தெளிவாக விளங்குகிறது.

ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம் நடத்துங்க.


//அதற்காகவே அந்த மதங்களைப் பற்றி என் ஆய்வை கொஞ்சம் விஸ்தாரமாக வைத்தேன்.//

இது "நான் ஏன் மதம் மாறினேன் - 5" -ல் தருமி வைத்தது.

இவருடைய விஸ்தாரமான ஆய்வில் அவர் கண்டு கொண்ட உண்மை,

1. "இஸ்லாத்தில் முதல் மனிதன் ஆதமுடைய மனைவிக்கு பெயர் இல்லை"
2. "கிறிஸ்தவ கடவுள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக பைபிளில் வருகிறது"

இதில் முதல் விஷயத்தைக் குறித்து என்ன கூற - சரி இஸ்லாமியரல்லாத அவர் முழுமையாக குரானை ஆய்வு செய்வது சாத்தியமில்லை என விட்டு விடலாம்.

ஆனால் இரண்டாவது விஷயம்!?

பைபிளில் இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக வருகிறதே என கிறிஸ்தவரல்லாத நான் எழுப்பிய கேள்வி இன்னும் தொங்கிக் கொண்டு நிற்கிறது.

அவர் மதம் மாற காரணங்களில் முக்கிய காரணமாக இதனை வேறு படுத்தியுள்ளார். லாஜிக்கே அடிபடுகிறது.

ஒரு கிறிஸ்தவரான அவருக்கே இது தெரியவில்லை எனில் அவருடைய விஸ்தாரமான ஆய்வை குறித்து(தனது வேத புத்தகத்தைக் குறித்தே சரியான பார்வையில்லாத போது) என்ன சொல்ல?

இனி இதற்கு கூட அவரிடமிருந்து ஆழ்ந்த விஸ்தாரமான அபூர்வ பதிலாக, "ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்" - இதனை எதிர்பார்க்கலாம்.

இவன் என்னடா அவருடைய பதிவில் வைக்க வேண்டிய பின்னூட்டத்தை இங்கு வைக்கிறானே என்றொரு கேள்வி எழலாம்.

நான் இது தொடர்பாக ஏற்கெனவே அவர் பதிவில் வைத்த பின்னூட்டத்தை ஒரு மரியாதைக்கேனும் இதுவரை பிரசுரிக்காத அவருடைய விசால மனதை நம்பி எப்படி அங்கு வைப்பது. அதனால் தான் அவர் புழங்கும் நியாயமான பின்னூட்டங்களை அனுமதிக்கும் இது போன்ற இடங்களில் இதனை பதிப்பித்து போகிறேன்.

இதே பதிவில் இன்னொரு பகுத்தறிவாளன் வைத்த பின்னூட்டத்திற்கு நான் வைத்த பதில். (இது நாங்கு நாட்களாகியும் இதுவரை நல்லடியார் அவர்களால் அனுமதிக்கப்படவில்லை)
//

ஒரு பேச்சுக்கு உங்கள் வீட்டுப் பெண்களில் ஒருவர் இவ்வாறு நடித்திருந்து நீங்கள் போட்டது போல் ஒருவர் பதிவெழுதி அதை நீங்கள் படிக்க நேர்ந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?//

அட அத்துவல்லாம் பெண்கொலத்த குறிப்பிட்டு சொல்லலீங்கோ. அத்த வெறும் விமர்சனமா மட்டும் பாருங்கோ. நொள்ள கண்ணு கொண்டு பாத்தா இப்பிடித் தான் வெவரம் கெட்ட தனமா கேள்வி வரும்.

//பெண்ணியம் குறித்து உரத்த குரல் எழுப்பும் போது தான் முதலில் அதைக் கடைபிடிக்கிறோமா என ஒருமுறை கேட்டுவிட்டு பிறருக்குச் சொல்லலாம்.//

என்னங்க நீங்க. நாம வெளிய பேசறது எல்லாம் நமக்கில்லீங்க. பெண்ணியங்குற பேருல நாம அப்படி கொரலு கொடுத்தா தானே இது போல அவுத்து போட்டு பெண்ணுக பொறத்த வருவாவ. நம்ம வூட்டு பொண்ணுகளுக்கு சமூகத்துல மரியாத கெடக்கணுமுன்னு நாம நெனக்கறது போல மத்த பொண்ணுகளுக்கும் நாம நெனச்சா பின்ன எப்படி தான் இது போல ஜொள்ளு வுடறதாம். எல்லா பொண்ணுகளும் போத்திகிட்டு வந்தா நம்ம அரிப்ப தீத்துகிடூது எப்படியாம். இதுகூட இன்னும் தெரியாம என்னத்த தான் இதுவர நீங்க "பகுத்து" "அறிஞ்சீங்களோ"? அப்பிடிப்பாத்தா நம்ம பெரியவரு டோண்டு சாரு பெண்ணுங்களுக்கு கொடுத்த ஐடியாக்கள மொதல்ல அவரு வீட்டு பொண்ணுங்களுக்கு சொல்ல சொல்லுவீரு போல தோணுதே? அதெல்லாம் நடக்கிற காரியமா?

//'பிறர் கண்ணில் துரும்பு இருப்பதைப் பார்ர்க்குமுன், உன் கண்ணில் கிடக்கும் உத்திரத்தைக் கவனி' என்கிற ஏசுநாதரின் அறவுரை நினைவுக்கு வருகிறது.. //

ஒங்களுக்கு தானே. அவருக்கு இது நாபகத்துக்கு வர சான்ஸ் இல்லீங்க. இப்பிடி ஒன்ன அவரு பைபிளில படிச்சிருந்தா தானே நாபகத்துக்கு வரும்.

"ஏசுநாதர கர்த்தர் காப்பாத்துனதா" பைபிளுல வருதே அப்பிடீன்னு நா மாங்கு மாங்குன்னு கத்திகிட்டிருக்கேன். இதுவர அத்த அவுரு கண்டுகிட்டது போல காட்டுறாரா பாருங்க?
இனி அப்படியே இத்த அவுரு பைபிளுல படிச்சிருந்தாலும் அத்த அவுரு பின்பற்றணுமின்னு அவசியமொண்ணுமில்லீங்க. அவுரு தான் "மதம் மாறி" ரொம்ப நாளாச்சே.

ம்....
செவிடன் காதுல ஊதிய..........

எரும மாட்டு மேல மழ பெஞ்ச......

14 comments:

said...

//பைபிளில் இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக வருகிறதே என கிறிஸ்தவரல்லாத நான் எழுப்பிய கேள்வி இன்னும் தொங்கிக் கொண்டு நிற்கிறது.//


இந்தக்கதையை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்.
நானறிந்த பைபிள்கள் எவையுமே இப்படியொரு கதை சொன்னதில்லை.
நீங்கள் பைபிள் என்று குர்ஆனைத்தான் சொல்கிறீர்களோ என்று நினைக்கிறேன்.

யாரோ உங்களுக்கு விட்ட கதையை இப்படி மாங்கு மாங்கென்று கேட்டுத் திரிந்தது கொஞ்சம் அதிகம்தான்.

said...

உங்கள் கேள்விகள் கிறித்தவர்களாகத் தம்மை இனங்காட்டும் ஒருவரின் கண்ணிற்கூட படவில்லையென்பது ஆச்சரியமாயிருக்கிறது.

நிற்க, இயேசு சாகவில்லை, காப்பாற்றப்பட்டார் என்று பைபிளில் வந்திருந்தால், இயேசுவின் உயிர்த்தெழுகை எல்லாம் பொய்யாகிவிடுமே?

நீங்கள் எங்கிருந்து இப்படியொரு கதையை அறிந்தீர்களென்று சொல்ல முடியுமா?
முந்தைய பதிவுகளில் பைபிளில் இருந்து அதிகாரம், வசனம் முதற்கொண்டு குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இப்படியொரு கதையை நம்பி மாங்குமாங்கென்று எழுதியநேரத்துக்கு பைபிளில் தேடிப்பார்த்திருக்கலாமே?

said...

ரொம்ப எதார்த்தமா கலாசுறிங்க :-))

said...

பகுத்தறிவுக் கொழுந்து,

தருமிக்கு கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும். பதில் இருந்தாலும் அவை பதியப்படாது.

தருமி சார்! ஏனய்யா இப்படி கருமித்தனம் பண்ணுகிறீர். தெரிஞ்சா பதில் சொல்லி ப"குத்து"அறிவாளர்களை அடக்குமய்யா!

said...

வாருங்கள் வசந்தன் அவர்களே.

//நானறிந்த பைபிள்கள் எவையுமே இப்படியொரு கதை சொன்னதில்லை.
நீங்கள் பைபிள் என்று குர்ஆனைத்தான் சொல்கிறீர்களோ என்று நினைக்கிறேன்.

யாரோ உங்களுக்கு விட்ட கதையை//

அப்படி யாரோ விட்ட கதய நம்பி நா மாங்கு மாங்குன்னு கத்தினேன்னு நீங்க நெனச்சா நா என்னத்த சொல்ல.

சரி இது கதயாவே இருக்கட்டுமே. அப்படி ஒன்னும் பைபில்ல இல்லயின்னா நம்ம தருமி சாரு ஒரே வார்த்தயில சொல்லீட்டு போவ வேண்டியது தானே.

இது வர நா கேட்ட அந்த கேள்விய அனுமதிக்கக் கூட இல்லையே. ஏன்?

Anonymous said...

//அப்படி யாரோ விட்ட கதய நம்பி நா மாங்கு மாங்குன்னு கத்தினேன்னு நீங்க நெனச்சா நா என்னத்த சொல்ல.//

So where did you get that?
-Vasanthan.

said...

//உங்கள் கேள்விகள் கிறித்தவர்களாகத் தம்மை இனங்காட்டும் ஒருவரின் கண்ணிற்கூட படவில்லையென்பது ஆச்சரியமாயிருக்கிறது.//

எனக்கும்.


//இயேசு சாகவில்லை, காப்பாற்றப்பட்டார் என்று பைபிளில் வந்திருந்தால், இயேசுவின் உயிர்த்தெழுகை எல்லாம் பொய்யாகிவிடுமே?//

யாருடைய கண்ணிலுமே படாததற்கு அது தான் காரணம் என்பது தற்போது விளங்குகிறதா?

//இப்படியொரு கதையை நம்பி மாங்குமாங்கென்று எழுதியநேரத்துக்கு பைபிளில் தேடிப்பார்த்திருக்கலாமே?//

என்னங்க நீங்க. பைபிளுல அப்படி இருப்பத தெரிஞ்சிக்கிட்டதனால தானே இவ்வளவு தைரியமா கேள்விய கேட்டேன்.

என்னோட முந்தைய பதிவுகள நீங்க முழுமையா படிக்கல்லன்னு தோணுது.

நா ஒண்ணும் யாரோ எதெயோ சொன்னத கேட்டோ இல்லேன்னா நுனிபுல்லு மேய்ஞ்சிட்டோ இந்த கேள்விய வைக்கல்ல.

இஸ்லாத்துக்கும் கிறிஸ்த்தவத்துக்கும் இடையில் உள்ள பிரிவினையே இந்த "இயேசுவின் சிலுவை மரண" நம்பிக்கையில் தான் உள்ளது.

"இயேசு சிலுவையில் மரணித்தார்" என்ற இந்த நம்பிக்கை பின்னால் வந்தவர்களால்(பவுல் அடிகளின் தலைமையில்) இடைசெருகப்பட்டதே(அதிலும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் ஜீவன் உடலை விட்டு பிரிந்ததற்கு பைபிளில் எவ்வித ஆதாரமுமில்லை).

இதனை முழுமையாக ஆராய்ந்தே இக்கேள்வியை வைத்தேன்.

ஆராய்ச்சியில் இறங்கி 20 வருடம் கடந்து விட்டது. இது வரை எவ்வித முடிவுக்கும் அவசரப்பட்டு(நம்ம தருமி சாரப்போல)வரல.

பைபிள ஆராயும் போது உண்டான சில அடிப்படையான கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலே ஒரு முடிவுக்கு வர இயலும்.

அப்படி மனசில இருக்கிற எல்லா சந்தேகங்களயும், கேள்விகளயும் வக்கிறதுக்காத்தான் இந்த வலப்பதிவே ஆரம்பித்தேன்.

இத நீங்க என்னுடைய மொத பதிவ படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.

said...

So where did you get that?//

நேரடியா பைபிள்லருந்துதாங்க.

பைபிளில் தெளிவாக உபத்ரவிக்கப்பட்டவனை (இயேசுவை) கர்த்தர் காத்து இரட்சித்ததாக காணப்படுகிறது.

said...

//ரொம்ப எதார்த்தமா கலாசுறிங்க :-))//

மொத மொறயா வறீங்க. வாங்க.

பாராட்டுக்கு நன்றி வவ்வால் அவர்களே.

said...

வருகைக்கு நன்றி தஞ்சை கண்ணன் அவர்களே.

அது என்ன பகுத்தறிவாளனின் பெயரிலேயே ஓர் குத்து.

நன்றாகவே பார்த்து "குத்து"கிறீர்கள்.

எத்தனயோ மொற நா கேட்டு தளந்துட்டேன். இனி நீங்க சொல்லியாவது அவரு பதிலு சொல்லாரான்னு பாப்போம்.

(தருமி சாரு மேல தஞ்சை கண்ணன் வைத்திருக்கும் மரியாதக்காவது அவரு பதிலு சொல்லுவாருன்னு எதிர் பாப்போம்) :-)

said...

இல்லை பகுத்தறிவாளன்.
விவிலியத்தில் எங்குமே நீங்கள் சொன்னவாறு சொல்லப்படவில்லை. இயேசு உயிர்நீத்தது, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது, உயிர்த்தெழுந்தது என்றவாறு தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் பைபிள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.

உங்கள் முந்தைய பதிவுகளை நான் படிக்கவில்லைதான். அதற்கு அவசியமுமில்லை. இந்தப் பிரச்சினைக்கு நீண்டகட்டுரைகள் எதுவும் தேவையில்லை. ஒரேயொரு வசனத்தில் பிரச்சினை முடிகிறது. சரி முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தாலும் அந்த வசனத்தை இங்கே எனக்காக வெட்டி ஒட்டிவிடுங்களேன்.

நீங்கள் சொல்வது போல் பவுல் அவர்களால் செருகப்பட்டிப்பதாக சொல்வதும் புரியவில்லை. பவுலின் திருமுகங்கள் எவையும் இயேசுவின் வாழ்க்கைக் காலத்தைச் சொல்வதில்லை. இயேசுவின் வாழ்க்கையை எழுதியவர்கள் நால்வர் மட்டுமே.

//பைபிளில் தெளிவாக உபத்ரவிக்கப்பட்டவனை (இயேசுவை) கர்த்தர் காத்து இரட்சித்ததாக காணப்படுகிறது. //

இயேசுவை என்று நீங்கள்தான் அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளீர்கள். அடைப்புக்குறிக்குள் சொல்வது குர்-ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் முறை. விவிலியத்துக்குச் சரிவராது. விவிலியத்தில் கர்த்தர் என்பது இயேசுவைத்தான் குறிக்கிறது. பெரியவரை, பிதா, தந்தை என்ற சொற்களினூடாகக் குறிக்கப்படும்.

அனானிமஸ் said...

யபா பகுத்தறி,

நான் பேரில்லாம கீறேன்..

நீங்க என்ன சொன்னாலும் நம்ப மறுத்து ஒரு சாம்பிளுக்கு அனானிமஸ் அப்டின்ற பேரில ஒரு பின்னூட்டம் வச்சேன்.அதுல நா ஆரயும் திட்ட இல்ல.

என்னா சொன்னேன்னா அவர் நான் ஏன் மதம் மாறினேன் இடுகையில

"அறியப்பட்ட ஒரு இந்துத்துவ வாதி இந்தப் பதிவின் மையக் கருத்தினைத் திசை திருப்ப முயல்வதைப் புரிந்து கவனமாக இருங்கள்"

தோராயமா நினவில இருக்குறது. இதையும் பிரசுரிக்காம மனுசன் தன்னோட நட்ட நடு நெலயக் காட்டிட்டார்

said...

நண்பர் வசந்தன் அவர்களுக்குரிய பதில் நீண்டு விட்டதால் அதனை விரைவில் அடுத்த பதிவாக வைக்கிறேன்.

said...

நண்பர் வசந்தன் அவர்களுக்கு...

http://sitharalkal.blogspot.com/2006/06/blog-post.html