Thursday, November 23, 2006

தேவகுமாரன் என்றால் தெய்வத்தின் மகனா?

கேள்வி: 3. மெல்கிசேதேக்கு அப்படீன்னு ஒரு தீர்க்கதரிசிய ஆதியும் அந்தமும்
இல்லாதவன்னும் தந்தயும் தாயும் இல்லாதவன்னும் பைபிள் சொல்லுதே அத வச்சு அவர கடவுள்
ரேஞ்சுக்கு உயர்த்தலாமே ? ஏன் செய்யல. கடவுள்னாலும் இறைமகன்னாலும் அதுக்கு முழு
தகுதியும் இவருக்குதானே இருக்கு. அப்போ ஏன் இவர யாரும் கண்டுக்கல.

பதில்: இது பற்றி எனக்கு தெரியாது .பைபிளில் எங்கே சொல்லியிருக்குண்ணு சொன்னா
படிச்சிட்டு சொல்லுறேன்.

மேல ஒள்ளது நண்பர் ஜோகிட்ட நா கேட்ட கேள்வியும் அதுக்கு அவரு சொன்ன பதிலும். எனக்கு நண்பர் ஜோகிட்ட பிடிச்ச ஒரு விசியம் இது தான். தனக்கு தெரியாத்தத தெரியாதுன்னு பட்டுன்னு சொல்லூதும் தப்பு தங்கிட்டயே இருந்தாலும் தப்ப தப்புன்னு சொல்லூதும் தான். இது சாதாரணமா மெத்தப்படித்த "பேராசிரியர்கள்ட்ட" இருக்கணும்.

ஆனா நெலம இங்க அப்படியே மாறியிருக்கு. அந்த விசியத்துக்கு கடைசீல வாரேன். மொதல்ல நண்பர் ஜோவுக்கு பதில்.

1. இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.

2. இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.

3. இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். (புதிய ஏற்பாடு. எபிரேயர், அதிகாரம் 7)

மேல காணூது சத்தியமா நா எழுதுன பைபிள்ல ஒள்ளது இல்லீங்க. நா விசியம் தெரிஞ்சிக்கிடதுக்காக படிக்கிற கிறிஸ்த்தவர்கள் பயன்படுத்துற பைபிள்ல ஒள்ளதுங்க.

இந்த வசனத்துல சொல்லப்படற மெல்கிசேதேக்கு அப்படீங்கற ஆளு தாயும் தந்தயும் இல்லாதவன்னும், ஆதியும் அந்தமும் இல்லாதவன்னும் "தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவன்னும்" பைபிள் தெளிவா சொல்லுது.

ஏசுவ கர்த்தரோட மகன்னு சொல்லி அவரையே கர்த்தரா கொண்டாடுற கிறிஸ்த்தவர்கள் அவருக்கு ஒப்பானவன்னு சொன்ன இந்த மெல்கிசேதேக்க கண்டுக்கவே இல்ல.

ஒரு பெண்(கன்னி) வயிற்றில பிறந்த ஏசுவ விட தாயும் தந்தயும் இல்லாத மெல்கிசேதேக்கு எந்த வகைல கொறச்சல். அதுமட்டுமில்ல. ஒரு பெண் வயித்துல பிறக்கறவன குறிச்சு இதே பைபிளு என்ன சொல்லுது?

ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன், சுத்தமாய் இருப்பது எப்படி? (யோபு 25:4)

அப்படீன்னா பைபிள்படி சுத்தமில்லாத ஏசுவ விட சுத்தமுள்ள மெல்கிசேதேக்கு உயர்ந்தவனில்லையா?

அந்த மெல்கிசேதேக்கப்பத்தி தொடந்து வரூத பாருங்க.

4. இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.

5. லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.

6.ஆகிலும், அவர்களுடைய வம்ச வரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.

7. சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.

8. அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.

இன்னிக்கு உள்ள ஒலக ஜனங்கள்ல பெரிய ஒரு தொகைக்கு(கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள்) தந்தையான ஆபிரகாமுக்கே ஆசீர்வாதம் வழங்கக்கூடிய அளவுக்கு பெரியவன் தான் இந்த மெல்கிசேதேக்கு.

அத மேல கண்ட 7 ஆவது வசனமும் தெளிவா சொல்லுது. ஆபிரகாம விட மெல்கிசேதேக்கு பெரியவன் அப்படீன்னு.
மேல ஒள்ளதிலருந்து மெல்கிசேதேக்குங்குறவரு,

1. ஆபிரகாமுக்கு ஆசி வழங்கும் அளவிற்கு உயர்ந்தவர்.
2. தந்தையும் தாயும் இல்லாதவர்.
3. ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.
4. இன்றுவரை இனியும் உயிரோடிருப்பவர்.

தெய்வமுன்னு சொல்லூதுக்கு ஒள்ள எல்லா தகுதியும் ஒள்ள இவர பைபிள பின்பற்றக்கூடிய கிறிஸ்த்தவர்கள் ஏன் கண்டுக்கிடல?

ஏன்னா இப்படி ஒரு விசியம் பைபிள்ல இருக்கூதே சாமான்ய கிறிஸ்த்தவர்களுக்கு தெரியாது. மெத்த படிச்ச, 45 வருச அனுபமுள்ள, எல்லாத்தயும் படிச்சு முடிச்சுட்டேன்னு தம்பட்டம் அடிச்சிக்கிட்டு மதம் மாறுன தருமி அய்யாவுக்கே பைபிள்ல ஒள்ள ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விசியத்தப்பத்தி அதுவும் அவுரு கிறிஸ்த்தவத்திலருந்து மதம் மாறூதுக்கு காரணமா சொன்னதுல உள்ள ஒரு விசியத்தப்பத்தி தெரியல. பின்ன எப்படி சாமானிய மக்களுக்குத் தெரியும்?

3 comments:

said...

http://theyn.blogspot.com/2006/11/blog-post_23.html

said...

உண்மைதான். எனது நெருங்கிய நண்பரின் பெயர் மெல்கி செதேக் என்பதால் நான் அறிந்தது...மெல்கி செதேக் பரலொகத்தின் ஆசாரியன்...ஏறக்குறைய இறைவனுக்கே பாதிரியாரைப் போன்றவர்

மெல்கி சேதக் என்ன லூசிபருக்கு கூட ஆதி இருக்க முடியாதே!

இதையெல்லாம் பற்றி குழப்பிக் கொள்வதற்கு பதிலாக, நாளைக்கு கரண்டு பில்லை ஞாபகமா கட்டிரணும்னு கவலைப்பட்டால் போதுமானது, இல்லையா?

said...

//இதையெல்லாம் பற்றி குழப்பிக் கொள்வதற்கு பதிலாக, நாளைக்கு கரண்டு பில்லை ஞாபகமா கட்டிரணும்னு கவலைப்பட்டால் போதுமானது, இல்லையா//

ராஜதுரை அய்யா,

ஆமாங்க..இல்லைன்னா 'let there be light" ன்னு சொன்னா லைட் வராதுங்க.

பாலா