Tuesday, December 13, 2005

நான் ஏன் நிறம் மாறினேன்! - 1

என்னடாது சட்டய மாத்துறத கேட்டிருக்கோம்; வீட்ட மாத்துறத கேட்டிருக்கோம்; செலரு மதத்த மாத்துறதயும் கேட்டிருக்கோம்; இவய்ங் என்னடாது புதுசா நெறத்த மாத்திட்டேன்னு! யாராது ஒடம்புக்க நெறத்த மாத்திட்டேன்னு தப்பா நெனச்சிட்டு கறுப்ப வெள்ளயா மாத்த முடியுமான்னு கேட்டுட்டு வந்திராந்தீங்க! இது நா இப்பத்தைக்கு மட்டும் வலயில பதிக்க வந்த காரணத்த மாத்திக்கிட்டேங்கிறதப் பத்தியும், திடீருன்னு அப்பிடி மாத்திக்கிட காரணமென்னன்னும் சொல்லூதுக்காகத் தாங் இந்த பதிவு.

செலப்போ இது நாலு அஞ்சு பதிவு வரக்கும் போவூன்னு நெனக்கேங். எதயும் நெச்சயமாட்டு சொல்ல முடியாதில்ல. பாப்போம். மொளச்சு மூணு எல விடல அதுக்குள்ள இவனுக்கு என்ன வந்துதுன்னு நீங்க கேக்கூது எனக்கு புரியிது. என்ன செய்ய அந்த சூழ்நெலக்கு என்ன வரவச்சிட்டாங்களே.

இந்த வேலீல போற ஓணான எடுத்து.............. அந்த பழமொழிய கேட்டிரிக்கீங்கல்ல. அது போல தாங் இதும். எப்பவாது நேரங்கெடக்கிம்போ வலேல மேய்ஞ்சிட்டிருந்தேங். அப்போதான் நம்ம காசி அண்ணாச்சியோட தமிழ் மணமும் அதுல வரூதுக்கு ப்ரீயாட்டு ப்ளாக்கும் கெடக்கிதுன்னு தெரிஞ்சிது. செரி நமக்கும் ஒண்ண தொறந்து எதயாது எழுதலான்னு வந்தேங்.

எழுதும்போ என்னத்த எழுதூது அப்படீன்னு யோசிச்சப்ப தான் ஐடியா வந்துது, நமக்கு தோணக்கூடிய சந்தேகங்கள எல்லாங் எழுதி வைக்கலாங். யாராது அதப் பத்தி வெளக்கங் தந்தா அது நமக்குங் பிரயோஜனமா இருக்கூன்னு நெனச்சு பதிக்க ஆரம்பிச்சேங். இத நா மொதல்ல ஒள்ள பதிவுலயே சொல்லீட்டு தாங் ஆரம்பிச்சதே.

அப்பிடி நா தொடங்கின சமயத்தில எனக்கு இங்க ஒள்ள வல அடிதடி தெரியாதுங்க. ஏதோ எனக்கிட்ட இருக்க கொஞ்சம் மூளய வச்சு அதில இருக்க வெசயத்த எழுதலான்னு தாங் தொடங்கினேங். நா வந்தப்போ கூட எனக்கு வரவேற்ப்பெல்லாங் பலமாத்தாங் இருந்துது.

தொடந்து ரண்டு மூணு பதிவு போட்டப்போ பெரிய பிரச்சன ஒண்ணுங் வரல. இதுக்க முந்துன பதிவுல வந்துது பாருங்கோ ஒண்ணு ரண்டு பின்னூட்டம், அத படிச்சப்போ தான் ஒரு விசியம் பிடிகெடச்சுது. இந்த வலய பொறுத்தவர நாம எதுக்கு வந்தோன்னு மொதல்லயே சொல்ல கூடாதுன்னும், எந்த வெசயத்தயும் தொறந்து பேசகூடாதுன்னும்.(இது ஒன்னும் ஒடனே நா எடுத்த முடிவில்லீங்க, கழிஞ்ச ஒரு மாசமா தொடந்து தமிழ் பதிவுகள படிச்சு நிதானமா வந்த முடிவு தாங்க.)

அது மட்டுங் இல்லாம நம்மெ யாருன்னு வெளிப்படுத்தாம முக்கியமா நம்ம மதம் என்னன்னு வெளிப்படுத்தாம முடிஞ்ச வர ஆளப்பாத்து முடிஞ்சா மொகத்தப் பாத்து, ஆளு யாரு எந்த மதத்த சேந்தவங் அப்பிடீன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கு ஏஞ்சாப்புலத் தாங் பதிலும் சொல்லணூண்ணுங் தெரிஞ்சிட்டேன்.

இத மொதல்லயே தெரியாட்டேனால தாங் பேர பிடிச்சதுனால "பகுத்தறிவாளன்"னு வச்சிக்கிட்டாலும், நா ஒரு முஸ்லிமுன்னு ஒள்ளத மறைக்கல்ல.

நெறய படிக்குணூன்னே கழிஞ்ச ஒரு மாசமா பதிவு ஒண்ணும் போட கூட இல்ல. அப்பிடி இருக்கும்போ தான் எடேல ஒரு சம்பவங் நடந்துது. எழுதூதுக்கு நெறய விசியம் தெரிஞ்சிரிக்கணூன்னு நா தப்பா வெளங்கியிருந்தேன்னு அப்ப தாங் தெரிஞ்சிது. அது மட்டும் இல்லாம இங்க என்ன நடக்குதுன்னும் ஓரளவு நல்லா தெரிஞ்சிட்டேன். அதனால தாங் இப்போதக்கு மட்டுங் கேள்வி கேக்கூத மாத்தி வச்சிட்டு என்ன வம்புக்கிழுத்தவருடைய நேர்மைய மொதல்ல வெளிப்படுத்த போறேங்.

அது தாங் "நான் ஏன் நிறம் மாறினேன்" தொடர் பதிவு!

நா இப்பிடி ஒரு முடிவுக்கு வரூதுக்கு என்ன காரணம், எது எம்மனச மாத்திச்சு, "அந்த" மாறியவரு அதுக்கு சொல்ல காரணம் செரி தானா, தேடி அலுத்து முடிவுக்கு வந்தேன்னு சொல்லூது செரியா, உண்மையா அவரு தேடி வெட கெடக்காமத் தான் "மாறினாரா", அவரு சொல்ல காரணம் எல்லாஞ் செரி தானா? எல்லாத்தையும் தொடந்து எழுதலான்னு இருக்கேன்.

ஆனா அதுக்காக பின்னூட்டபெட்டிய மூடல. நா சொல்லூது தப்புன்னா ஒடனே யாரு வேணுமின்னாலும் சொல்ல தொறந்து தான் வெச்சிரிக்கேங். பின்ன மூடி வக்கீதுலயும் எனக்கு நம்பிக்க இல்ல(அது தனக்க கருத்து தப்பூன்னு சுட்டிகாட்டுத பின்னூட்டத்த அழிக்கவும் தானே).

அடுத்த பதிவுல பாக்கலாம்.

பின்குறிப்பு:

1. நா பதிக்க வந்தப்போ டி.பி.ஆர் அண்ணாச்சி நாகுரூலு(நாகர் கோவில்) பாசேல எழுத சென்னாரு. அவருக்காக இந்த பதிவு. தாங்க முடியாத்தவங்க அவருக்காக இந்த ஒரு மொற மட்டும் பொறுத்துகிடுங்கோ!

2. யாரயும் தனிப்பட்ட மொறேல விமர்சிக்கணூண்ணு நா நெனெக்கல்ல. இந்த தொடரு அப்படி இரிக்கயும் செய்யாது. ஒரு பொது விசியத்த பத்தி எழுதும்போ அந்த விசியமா சார்ந்து நிக்க ஆளு அதுல வந்தா அதுக்கு நா பொறுப்பல்ல.

8 comments:

Anonymous said...

நீ எயிதி கீரத்தெ கபாலி கைலெ காட்னம்பா. அவந்தா மொயி பேர்த்து ஸொன்னான்.

நெல்லா எயிதிரே கண்ணு.

பூலாக்கு பூலாக்குன்றாங்லே ... நானு ஒன்னு போட்லான்னு கீறேன்.

இன்னான்றே?

Anonymous said...

நீங்கள் ஏன் நிறம் மாறினீர்கள் என்ற இந்தப் பதிவு ரொம்பவும் அவசியமானது தான் அய்யா.. முதலில் பிலிம் காட்ட வேண்டியது.. பின்னர் கொஞ்சம் பேர் சேர்ந்தவுடன் உள்மனக் கிடக்கையை (இஸ்லாமியக் காழ்ப்பை) கூட்டாளிகள் சகிதம் கொட்ட வேண்டியது.. அதற்குப் பின் இணையத்தில் நாகரீகமே தெரியாமல் எழுதக் கூடியவர்கள் பின்னூட்டங்களை நாள் கணக்கில் வைத்து விட்டு பின்னர் அழிப்பது போல் பாவ்லா பண்ணுவது.. எதிர்ப் பின்னூட்டக் கருத்துக்கள் வந்தால் ('அந்த அவரே' அவரது பின்னூட்டத்தில் சொன்னது) வந்தால் அனுமதியாது அழித்தும் விடுவது.. இதிலிருந்தே தெரியவில்லையா இவரது தேடலின் உள்நோக்கம் என்னவென்று.. இதற்கு பின்னூட்டங்களை அழிக்கத் தெரியாது என்று பொய் வேறு.. சரிதான் கேக்குறவன் கேனயனா இருந்தா............... என்னென்னமோ ஞாபகம் வருது.... தொடருங்கள் நிறம் மாறிய கதையை..

Anonymous said...

//நீ எயிதி கீரத்தெ கபாலி கைலெ காட்னம்பா. அவந்தா மொயி பேர்த்து ஸொன்னான்.//

இத மொயி(!?) பேக்க நா எங்க போவ!

said...

//அவைகளை நீக்க (இதுவரை பின்னூட்டங்களை நீக்கிய அனுபவம் இல்லாததால், அது என்னால் முடியுமாவென தெரியாது) முயற்சிக்கிறேன்.//

இது இஸ்லாத்துக்கு எதிரான காழ்ப்புணர்வு பின்னூட்டங்களை அழிப்பது பற்றி 'நான் ஏன் மதம் மாறினேன்' என்று யாரும் கேட்காமலே சொன்ன ஒரு பதிவரின் பின்னூட்டம்

//பின்னூட்டங்களில் Neutral கருத்தோடு வந்த சத்யம் என்பவரது பின்னூட்டத்தைத் தவிர ஏனையவற்றை நீக்கியுள்ளேன்//

இதுவும் அதே பதிவர் சொன்னது தான். (எதிர் தரப்பாக வந்த முஸ்லிம் பின்னூட்டங்கள் பற்றி).

உள்நோக்கம் விளங்குகிறதா..?

said...

உங்கூரு பாசை நல்லா ஈக்கிது.

(இது உங்கூரு பாசை :)

ஈக்கிது = இருக்கு

Anonymous said...

யபா பகுத்தறி,

ஒன்னய மாரி பெர்ய மன்ஸன்க கீற கண்டி நாட்ல மய பெய்யிது ... போன கெயம தாஸ்தியா பூட்ச்சி).

மித்தவங்கல்லாம் என்னிய மாரி பூலாக்கு இல்லாதெ பொறம்போக்குங்கலெ பீட்பேக் எயித வுட மாட்டன்றாங்கபா ... இன்னாத்துகின்றெ ... ஜக்கு எயித பூந்துட்டான்னா அவுங்கள்லா அம்பேலாயிட மாட்டாங்க?

இன்னான்றே?

பயமே இல்லாதெ நீயி என்னிய எயித வுட்டே பாரு ... அத்த கண்டி டாங்ஸ்பா.

-ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

ஏம்பா நிறம் மாறி, நீர் இரண்டு வயதிலேயே பள்ளிக்கூடத்துக்கு போனக்கதையும் எடுத்துவுடும்மய்யா?

said...

சமூகம் நிறம் மாறியது, மனம் மாறியது என்று சொல்வதெல்லாம் சுத்த வெற்றுப் பேத்தல். பிராமனர்களைக் கிண்டல் செய்கிறது இந்த வலைப்பதிவு.

சென்னையில் பிராமனர்கள் எனக்கு பகிர்ந்தளித்த விஷயங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? எல்லாவற்றையும் பகிர்ந்தார்கள். அவர்களை நிறத்தால் வர்ணபேதத்தால் பிரித்து எழுதுவது தவறு.