Monday, November 07, 2005

அறிமுகம்

பெயரைப் பார்த்து வந்தவர்களுக்கு முதலில் நல்வரவு!

என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதை விட மனதில் தோன்றுவதை அப்படியே எழுதினால் என்ன என்று தோன்றியதால் நானும் எனக்கென ஒரு வலைப்பதிவுடன் உங்கள் முன் வருகிறேன். ஆரம்பத்திலேயே ஒன்றை கூறி விடுவது நலம்.

மனதில் தோன்றுவதை அப்படியே எழுதப் போவதால் இங்கு கோர்வையான எழுத்து நடையை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சப்போகிறது. வாயில் வருவதை கையால் கிறுக்கப்(அடிக்கப்) போகிறேன் அவ்வளவே.

படித்தவை, பார்த்தவை, கேட்டவை, அனுபவப்பட்டவைகளில் மனதில் எழுந்த சந்தேகங்களை கேள்விகளாக தொடுப்பது தான் இவ்வலைப்பதிவின் நோக்கம். இதில் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அறவே இல்லை. கேள்வி கேட்பதையே பிரதான நோக்கமாக கொண்டிருப்பதால் இப்பெயரை தேர்ந்தெடுத்தேன் - பொருத்தமாக இருக்கட்டும் என்று.

யார்யாரெல்லாமோ (இரண்டாம் வகுப்பு படிக்கும் குட்டிப் பாப்பா வரை) பதிக்கும் போது தடிமாடு போல் வளர்ந்த எனக்கு மட்டும் பதிப்பதற்கு ஒன்று கூட கிடைக்காதா என்ன? விரைவில் வருகிறேன் முதல் கேள்வியுடன்

அன்புடன் பகுத்தறிவாளன்.

14 comments:

said...

வருக.

பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது என்பார்கள் - நீங்கள் உல்டாவாக இருக்கிறீர்கள் :-)

said...

வலது காலை எடுத்து வெச்சி வாங்க :-)
உஷா

Anonymous said...

வருக!

said...
This comment has been removed by a blog administrator.
said...

நீங்க நாகர்கோவில் காரரா??
வாழ்த்துக்கள்... கலக்குங்க....

said...

அன்புள்ள சிறீகாந்த், ராமசந்திரன் உஷா, அப்டிபோடு, போ(!) கணேஷ் அனைவருக்கும் நன்றி

said...

வாங்க வாங்க.

இலங்கை தமிழர்கள் அவர்கள் பாணியில் தமிழில் எழுதுவது போன்று உங்க நாகர்கோவில் பாணியில் எழுதுனீங்கன்னா நல்லாருக்கும்..

பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாதுன்னு ஸ்ரீகாந்த் சொல்லதை விட்டுருங்க..

பேரையும் சொல்லணும், ஊரையும் சொல்லணும். அப்பத்தான் நம்ம சொல்றது Authentic ஆ இருக்கும்

வாழ்த்துக்கள்!

said...

//உங்க நாகர்கோவில் பாணியில் எழுதுனீங்கன்னா நல்லாருக்கும்..
//

கல்பில் வந்து ரண்டு வருசத்துக்கு மேல ஆனதினால கொஞ்சம் டச் விட்டு போயிட்டுது. ட்ரை பண்ணி பாக்கேன்.

நன்றி நண்பரே!

said...

"விருப்பங்கள்: புகைப்படம் எடுத்தல், பழைய நாணயங்கள், தபால்தலைகள் சேகரித்தல், தமிழ், ஆங்கில வாசிப்பு."

முதலையின் வாயில் தலையை கொடுப்பதை குறிப்பிடவில்லையே!!!!!!!!!
:-)

said...

vanthtinga irunthalum varaverkrom.vanga vanga.

said...

Arembamae suparayirukku. eppadi thamizhil valaip pathivu Arambikkanum. sila thamizh pathivukaLai thamizil padikkamdiyavillai. vungkaLoodathu padikkavum mudikiRathu. Enakkum sollungkaLeen, please.

said...

நண்பர் தங்கவேல் அவர்களுக்கு நன்றி!

உங்களுக்கு தனி மடல் உங்கள் மெயிலில் அனுப்பியுள்ளேன். படித்து முயற்சி செய்துவிட்டு தொடர்பு கொள்ளுங்கள். கண்டிப்பாக எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.

said...

என் அன்புள்ள சினேகிதிக்கு.......

விருந்தினர்களை இப்படியா வரவேற்பது - குடிக்க தண்ணி கூட தராம:-))))

said...

நன்றி சினேகிதியே!